இந்தியா

பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பது ஏன்: காங்., கேள்வி

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''மத்திய அரசு எதற்காக பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்க்கிறது என்பதை விளக்க வேண்டும்'' என, காங்., அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி காங்., அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:நாட்டின் பொதுச் சொத்துக்களை தனியாரிடம் வழங்கி ரூ. 6 லட்சம் கோடிக்கு நிதித்திரட்டப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுச்சேரி : ''மத்திய அரசு எதற்காக பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்க்கிறது என்பதை விளக்க வேண்டும்'' என, காங்., அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி காங்., அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:நாட்டின் பொதுச் சொத்துக்களை தனியாரிடம் வழங்கி ரூ. 6 லட்சம் கோடிக்கு நிதித்திரட்டப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும், எதிர் கட்சிகளிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர். பிரதமர் மோடியும், நிதியமைச்சரும், பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து விட்டனர்.

கொரோனா பாதிப்பில் 8 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி கவலைப்படாமல், மத்திய அரசு, பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது.எதற்காக இந்த சொத்துக்களை தாரை வார்க்கின்றனர், அந்த நிதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X