இந்தியா

கிருமாம்பாக்கத்தில் தொழிற்பேட்டை; லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., விருப்பம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் நேற்று பேசியதாவது:முதல்வர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றுவார் என்பதற்கு இந்த பட்ஜெட் சாட்சியாக விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள், முதல்வரின் முதல் கையெழுத்தால், கொரோனா நிவாரணம் ரூ.3,000 வாங்கி, புத்துணர்வு

புதுச்சேரி : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் நேற்று பேசியதாவது:முதல்வர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றுவார் என்பதற்கு இந்த பட்ஜெட் சாட்சியாக விளங்குகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்கள், முதல்வரின் முதல் கையெழுத்தால், கொரோனா நிவாரணம் ரூ.3,000 வாங்கி, புத்துணர்வு பெற்றுள்ளனர். அழிந்து வரும் விவசாயத்திற்கும் பல்வேறு மானியம் வழங்கி புத்துயிர் அளித்துள்ளார்.ரேஷன் கடையை திறந்து அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்கும்.

அவர்களது வறுமை நிலை மாறும்.ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியை மாதிரி பள்ளி திட்டத்தில் சேர்த்து தரம் உயர்த்த வேண்டும். காட்டுக்குப்பம் துணை மின் நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்றிட வேண்டும். கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பத்தில் மீண்டும் தொழிற்பேட்டை அமைத்திட வேண்டும்.கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X