பல்லி விழுந்த உணவு சாப்பிட்டவர் பலி | Dinamalar

இந்தியா

பல்லி விழுந்த உணவு சாப்பிட்டவர் பலி

Added : செப் 01, 2021
Share
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர் உயிரிழந்தார்.வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் கிராமம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம்,55; விவசாய கூலித் தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில், குழம்பில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரியாமல் சாப்பிட்டு, மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில்

வில்லியனுார் : வில்லியனுார் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர் உயிரிழந்தார்.வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் கிராமம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம்,55; விவசாய கூலித் தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில், குழம்பில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரியாமல் சாப்பிட்டு, மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தார். வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன ஆறுமுகத்திற்கு, மனைவி இரு பிள்ளைகள் உள்ளனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X