இந்தியா

தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க வைத்தியநாதன் வலியுறுத்தல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று காங்.. எம்.எல்.ஏ. வைத்தியநாதன் பேசியதாவது;சட்டசபை கட்டடத்தை, மரபு மாறாமல் இருந்த இடத்திலேயே புதுப்பித்து கட்டலாம். புதிய சட்டசபை கட்டடத்திற்கு செலவிடும் தொகையை மக்கள் நல திட்டத்திற்கு பயன்படுத்தலாம்.மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் புதிய வார்டு பிரிப்பதில் பல குளறுபடிகள் இருப்பதால், அதை சரிசெய்யும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது.அரசு மருத்துவமனையில் பழுதாகி உள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவியை சரிசெய்ய வேண்டும். லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ், இ.சி.ஜி., வசதி ஏற்படுத்த வேண்டும்.புதுச்சேரியில் தற்போது ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது.

அதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பாட்கோ வழங்கிய கல்விக்கடன் தள்ளுபடி செய்தது போல், பிற்படுத்தப்பட்டோர் வாரியம் மூலம் வழங்கிய கல்விக்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நம் மாநில மாணவர்களுக்கு அனைத்து பாட பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு பெற வேண்டும்.

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்கவும், தொழில் கொள்கையை வெளியிட வேண்டும்.கருவடிக்குப்பம் பெத்துச்செட்டிப்பேட்டை விநாயகர் குளத்தை துார்வாரி, நடைபாதை அமைக்க வேண்டும். ராஜிவ், இந்திரா, மரப்பாலம் சிக்னலில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X