இந்தியா

சிங்கப்பூர் பயணம்: சபையில் சிரிப்பலை

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதம்:வைத்தியநாதன் (காங்.,): முதல்வர், மத்திய அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அமைச்சர் நமச்சிவாயம்: சபையில் தவறான தகவலை பதிவு செய்ய கூடாது.வைத்தியநாதன்: கூடுதல் நிதி பெறவில்லை. 1.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக நிதி பெற்றுள்ளீர்கள். 10 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.நமச்சிவாயம்: நாம் கேட்ட

புதுச்சேரி : சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதம்:வைத்தியநாதன் (காங்.,): முதல்வர், மத்திய அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் நமச்சிவாயம்: சபையில் தவறான தகவலை பதிவு செய்ய கூடாது.

வைத்தியநாதன்: கூடுதல் நிதி பெறவில்லை. 1.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக நிதி பெற்றுள்ளீர்கள். 10 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

நமச்சிவாயம்: நாம் கேட்ட பட்ஜெட் தொகையை மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கி உள்ளது.

ஆறுமுகம் (என்.ஆர்.காங்.): உங்கள் மனதிற்கு பட்டதை கூறுங்கள். அங்கே எழுதி கொடுத்ததை படிக்காதீர்கள்.

வைத்தியநாதன்: மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க கடந்த ஆட்சியில் லேப்டாப் வழங்கும் திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் ஆட்சி கலைப்பு நடந்தது. எனவே, லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நமச்சிவாயம்: எப்போது முடிவு செய்யப்பட்டது. அந்த கோப்பு எங்கு உள்ளது என கூறுங்கள்.

ஆறுமுகம்: லேப்டாப் வழங்க எப்போது திட்டம் போட்டார்கள்.எதிர்க்கட்சி தலைவர் சிவா: எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், ஆறுமுகத்திற்கு தெரியாமல், உங்களுக்கு தெரிந்து விடுமா.

நமச்சிவாயம்: கூட்டணியில் இருந்த சிவாவிற்கு தெரியாமலே பல விஷயங்கள் நடந்தது. சிங்கப்பூர் சென்று வந்தது வரை.

சிவா: சிங்கப்பூர் சென்றது எல்லாம் ஜான்குமார் எம்.எல்.ஏ.க்கு தான் தெரியும்.ஜான்குமார் (பா.ஜ.): எனக்கு ஒன்றும் தெரியாது.இந்த விவாதத்தால் சபையில் குபீர் சிரிப்பலை எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X