இந்தியா

வெற்றிலை சாகுபடிக்கு மானியம்; அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்'' என விவசாயத்துறை அமைச்சர் தேனீ ஜெயக் குமார் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் சிவா: தோட்டக்கலைத் துறை வழங்கும் மானியத்தில், வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்கப் படுவதில்லை. வெற்றிலை சாகுபடி செய்வது ஒரு கலை வில்லியனுார் பகுதியில் உள்ளவர்கள் மட்டும்தான் சாகுபடி

புதுச்சேரி : ''வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்'' என விவசாயத்துறை அமைச்சர் தேனீ ஜெயக் குமார் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் சிவா: தோட்டக்கலைத் துறை வழங்கும் மானியத்தில், வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்கப் படுவதில்லை. வெற்றிலை சாகுபடி செய்வது ஒரு கலை வில்லியனுார் பகுதியில் உள்ளவர்கள் மட்டும்தான் சாகுபடி செய்கின்றனர். முன்பு 150 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்தனர். அரசு கண்டு கொள்ளாததால் தற்போது 10 ஏக்கராக சாகுபடி குறைந்துவிட்டது. இதன் பிறகாவது வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்க வேண்டும்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: புதுச்சேரியில் 521 சென்ட் வெற்றிலை தோட்டம் உள்ளது. இதில் 36 பேர் உரிய ஆவணங்கள் வழங்கியுள்ளனர். 7 பேர் மட்டும் உரிய ஆவணம் தரவில்லை. இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வாரத்திற்குள் அவர் களுக்கு மானியம் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X