இந்தியா

சுருக்கு வலை பிரச்னைக்கு தீர்வு; கல்யாணசுந்தரம் கோரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் நேற்று பேசியதாவது:காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ஏம்பலம், பாகூர் ஆகிய சட்ட சபை தொகுதிகளுக்கு உட்பட்ட 18க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.இதில் வீராம்பட்டிணம் மீனவ கிராமத்தை தவிர மற்ற கிராமங்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. வீராம்பட்டிணம்

புதுச்சேரி : சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் நேற்று பேசியதாவது:காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ஏம்பலம், பாகூர் ஆகிய சட்ட சபை தொகுதிகளுக்கு உட்பட்ட 18க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.இதில் வீராம்பட்டிணம் மீனவ கிராமத்தை தவிர மற்ற கிராமங்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

வீராம்பட்டிணம் மீனவர்கள் மட்டும் தடை கோரி போராட்டம் செய்வதால் மோதல் ஏற்படும் நிலை உள்ளது.இது குறித்து மத்திய அரசை கேட்டபோது, 12 நாட்டிக்கல் மைல் துாரம் வரை மாநில அரசு எல்லை கட்டுப்பாட்டில் உள்ளது. 200 நாட்டிக்கல் மைல் துாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், அதற்கு 200 மைல் துாரம் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டிலும் உள்ளது.

12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு உட்பட்ட கடல் சார்ந்த பிரச்னைகளை மாநில அரசுகளே சட்டம் இயற்றி தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.எனவே, முதல்வர், மீனவர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.,க் களுடன் ஆலோசித்து, ஒரு குழுவை அமைத்து, மீனவ கிராம மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X