பொது செய்தி

தமிழ்நாடு

53 கி.மீ., நடந்து தாயிடம் கடிதம் வழங்கிய மகன்

Added : செப் 01, 2021
Share
Advertisement
காரைக்குடி: உலக கடித தினத்தை (செப்.,1) முன்னிட்டு, உலகத்தின் முதல் கடிதத்தை தமிழ்த்தாய் வடிவத்தில் எழுதி 53 கி.மீ., நடந்தே சென்று தாய் பானுமதிக்கு காரைக்குடியைச் சேர்ந்த சின்ன பெருமாள் 53, வழங்கினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ன பெருமாள். 10ம் வகுப்பு படித்துள்ளார். இவர், பொதுபிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகளை வண்ண எழுத்துக்களாலும், வெவ்வேறு வடிவிலும்
53 கி.மீ., நடந்து தாயிடம் கடிதம் வழங்கிய மகன்

காரைக்குடி: உலக கடித தினத்தை (செப்.,1) முன்னிட்டு, உலகத்தின் முதல் கடிதத்தை தமிழ்த்தாய் வடிவத்தில் எழுதி 53 கி.மீ., நடந்தே சென்று தாய் பானுமதிக்கு காரைக்குடியைச் சேர்ந்த சின்ன பெருமாள் 53, வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ன பெருமாள். 10ம் வகுப்பு படித்துள்ளார். இவர், பொதுபிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகளை வண்ண எழுத்துக்களாலும், வெவ்வேறு வடிவிலும் எழுதி அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு கண்டுள்ளார். இந்நிலையில், உலக கடித தினமான இன்று தனது தாய் பானுமதிக்கு முதல் கடிதத்தை எழுத நினைத்தார். தமிழ்த்தாய் சிலை வடிவில், வண்ண எழுத்துக்களால் தாய்க்கு கடிதம் எழுதினார்.

காரைக்குடியில் இருந்து 53 கி.மீ., துாரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள வாகைக்குடிக்கு நடந்தே சென்று தனது தாயிடம் கடிதத்தை ஒப்படைத்தார். சின்னபெருமாள் கூறியதாவது: ஒன்பது வயது வரை எனக்கு பேச்சு வராது. எழுத்துக்களே என்னை வழிநடத்தின. எனது தலைமையாசிரியர்கள் எனக்கு உந்து சக்தியாக இருந்தனர். பிரதமர் தொடங்கி பலருக்கும் இதுவரை 6 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளேன்.

செப்.,1ல் உலகின் முதல் கடிதம் பசுபிக் கடல் அருகே உள்ள டாங்கோ தீவில் எழுதப்படும். (இந்தியாவில் ஆக.,31ம் தேதி மதியம் ஆகும் போதே டாங்கோ தீவில் செப்., 1ம் தேதி வந்துவிடும்) அந்த சாதனையை முறியடிக்க், முதல் கடிதத்தை எழுதி காரைக்குடியிலிருந்து நேற்று காலை 7:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:31 மணிக்கு எனது தாயாரிடம் உலகின் முதல் கடிதத்தை வழங்கினேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X