பொது செய்தி

இந்தியா

வங்கி திவால் ஆனால் ரூ.5 லட்சம்; இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: ஒரு வங்கி திவால் ஆனால், அதில் 'டெபாசிட்' செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்ட தொகை திரும்ப கிடைக்கும் என்ற நிலை தான், அண்மைக் காலம் வரை இருந்து வந்தது.'டெபாசிட்' தொகைஇந்நிலையில், மத்திய அரசு, இத்தொகையை அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாயாக கடந்த ஆண்டு அதிகரித்து அறிவித்தது. இதற்காக, 'காப்பீடு
Depositors, stressed banks, Rs 5 lakh

புதுடில்லி: ஒரு வங்கி திவால் ஆனால், அதில் 'டெபாசிட்' செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்ட தொகை திரும்ப கிடைக்கும் என்ற நிலை தான், அண்மைக் காலம் வரை இருந்து வந்தது.


'டெபாசிட்' தொகை


இந்நிலையில், மத்திய அரசு, இத்தொகையை அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாயாக கடந்த ஆண்டு அதிகரித்து அறிவித்தது. இதற்காக, 'காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக' சட்டத்தில் திருத்தத்தையும் மேற்கொண்டது. தற்போது, இந்த சட்ட திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி, ஒரு வங்கி திவால் ஆனால், டெபாசிட் தொகை வைத்து இருந்த வாடிக்கையாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, 90 நாட்களுக்குள்ளாக கிடைக்கும்.திவால் ஆன வங்கியின் கணக்குகளை பெற்று, அவற்றை எந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை எல்லாம் கண்டறிய, முதல் 45 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இதன் பிறகு, உரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, 90வது நாளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்.


latest tamil news
சட்ட திருத்தம்


தற்போது வரை, வைப்புத் தொகைக்கான காப்பீட்டை பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரைகூட ஆகும் நிலைதான் இருந்தது. ஆனால் இனி 90 நாட்களில் பணத்தை பெற்றுவிட முடியும். இன்றைய தேதியில் ஒரு வங்கி முடக்கப்பட்டால், அதன் வாடிக்கையாளருக்கு நவம்பர் 30ம் தேதி, காப்பீட்டு தொகை கைக்கு வந்துவிடும். ஒவ்வொரு வங்கியும், அதன் 100 ரூபாய் வைப்புத் தொகைக்கு, 10 பைசாவை காப்பீட்டுக்கான பிரீமியமாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வணிக, வெளிநாட்டு, சிறு, கிராமப்புற, கார்ப்பரேட் வங்கிகள் அனைத்துமே, இந்த வங்கிகள் வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு கீழ் வரும்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
01-செப்-202115:24:01 IST Report Abuse
Vena Suna இப்போ நீங்க 25 லட்சம் FD போட்டு வாங்கி நஷ்டம் ஆச்சுன்னா, உங்களுக்கு 5 லட்சம் தான் திரும்ப வரும் 20 லட்சம் கோவிந்தா ...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-செப்-202115:13:47 IST Report Abuse
Vena Suna வங்கிகள் ஏன் திவால் ஆகும்? அரசியல் கட்சிகள் விவசாயி கதங்கள் ரத்து ,மாணவர் கடன்கள் ரத்து என்று கடன்களை ரத்து செய்தால் திவால் ஆகும் .அவர்கள் பிழைப்பது கொஞ்சம் வட்டி வைத்து தான். இங்கே முதலும் போய் விடும்.
Rate this:
Cancel
01-செப்-202112:42:30 IST Report Abuse
ஆரூர் ரங் சுதந்திரம் முதல் சுமார் 70 வங்கிகள் திவால் ஆகின. கடந்த 15, 20 ஆண்டுகளாக எந்த வங்கியும் திவால் ஆகவில்லை🤔. நிதி நெருக்கடியில் சிக்கும் வங்கிகள் வேறு வங்கிகளுடன் இணைக்கப் பட்டு காப்பாற்றபட்டுள்ளன. வங்கியின் டெபாஸிட் இன்சூரன்ஸ் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் ஒரு லட்சம் வரையே காப்பீடு என்று இருந்தது. பல டெபாஸிட்தாரர்கள் கெஞ்சியும் காங்கிரஸ் அரசு அதனை அதிகரிக்கவில்லை.. இப்போது 5 லட்சம் ஆகியுள்ளது வரவேற்கத்தக்கது.. அதுவும் டெபாஸிட் முதிர்ந்து 90 நாட்கள் ஆனாலே,( அசல் வட்டி சேர்ந்து,,,)5 லட்சம் வரை தானாகக் கிடைக்கும். வங்கி திவால் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல உள்ளங்கள் பாராட்டலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X