எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கோவில்களை சுற்றி குவியும் 'பிளாஸ்டிக்': தடையை மீறும் வியாபாரிகளுக்கு தண்டனை அவசியம்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' புழக்கம் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, கோவில் குளங்கள் அதிகளவில் மாசடைந்து வருகிறது. இப்பிரச்னையில் தமிழக அரசும், அறநிலையத்துறையும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, 2019 ஜன., 1ம் தேதி முதல், ஒருமுறை

கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' புழக்கம் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, கோவில் குளங்கள் அதிகளவில் மாசடைந்து வருகிறது. இப்பிரச்னையில் தமிழக அரசும், அறநிலையத்துறையும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



latest tamil news



தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, 2019 ஜன., 1ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக்பொருட்களுக்கு அரசுதடை விதித்தது.பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களையும், அரசு பரிந்துரை செய்தது. அரசு தடை விதித்த சில மாதங்கள் மட்டுமே, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சியினர் தீவிரமாக இந்த உத்தரவை கடைபிடித்தனர்.

கொரோனா பெருந்தொற்று, 2020 மார்ச் முதல் பரவ துவங்கியதை தொடர்ந்து, தொற்று பரவலை தடுக்கும் பணிகளில் அனைத்து பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் பிறகு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது.


latest tamil news


பெரும்பாலான கடைகளில், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை, வியாபாரிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அதன் உற்பத்தியும் ஜரூராக நடந்து வருகிறது.குறிப்பாக, கோவில்கள், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவை அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. விளக்கு ஏற்றும் எண்ணெய், கற்பூரம், ஊதுவர்த்தி, அர்ச்சனை கவர், பிரசாதம் கவர் என, வகை வகையாக பிளாஸ்டிக் பயன்பாடு காணப்படுகிறது.பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக குப்பை தொட்டியில் போடுவதில்லை. இதனால், கோவில் உட்புறம், வெளிப்புறத்தில் மட்டுமின்றி, கோவில் குளங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளாக அதிகளவில் தேங்கி கிடக்கின்றன.


latest tamil news



இவை சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் சேகரிப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீதான நடவடிக்கையை, சம்பந்தப்பட்ட துறையினர் தீவிரப்படுத்த வேண்டும். கோவில்களின் சுற்றுப்புற பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்க, அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


என்னென்ன பொருட்களுக்கு தடை?


உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் துாக்கு பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றுக்கு அரசு தடை விதித்துள்ளது.


latest tamil news



மாற்று பொருட்கள் என்ன?


வாழையிலை, பாக்குமர தட்டு, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கிள், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் ஆகியவை மாற்று பொருட்களாக அரசால் பரிந்துரைக்கப்பட்டன.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X