பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் துறையை முடக்கும் அமைச்சர் அறிவிப்பு: கோவை விவசாயிகள் கொந்தளிப்பு

Added : செப் 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோவை : விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையின் தலைமையிடத்தை, கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றும் அமைச்சரின் அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த தவறான முடிவால், வேளாண் உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு (ஆர்கானிக் சான்று) துறை,
வேளாண்துறை,முடக்கும், அமைச்சர், அறிவிப்பு, கோவை, விவசாயிகள், கொந்தளிப்பு

கோவை : விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையின் தலைமையிடத்தை, கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றும் அமைச்சரின் அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த தவறான முடிவால், வேளாண் உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு (ஆர்கானிக் சான்று) துறை, கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஐ.ஏ.எஸ்., அல்லாத தொழில்நுட்ப அதிகாரியை இயக்குனராக கொண்டு இந்த அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை சென்னைக்கு மாற்றுவதாக, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் அங்ககச்சான்று பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் குழுக்களில், 50 சதவீதம் பேர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அதேபோல, விதை உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகளும் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.'அரசின் இந்த முடிவால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். வேளாண் உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கும் நிலை உள்ளது' என்கின்றனர், விவசாயிகள்.


'அனைவருக்கும் சிரமம்'


latest tamil news


வேளாண் துறை முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு எம்.எல். ஏ.,வுமான தாமோதரன் கூறியதாவது: பிரசித்தி பெற்ற கோவை வேளாண் பல்கலையை ஒட்டி, இந்த அலுவலகம் அமைந்திருப்பதால், விவசாயிகளுக்கு பல விதங்களிலும் வசதியாக உள்ளது. இயற்கை விவசாயம் செய்வோர், மேற்கு மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.ஏற்றுமதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் எல்லோரும் சான்று பெறுவதற்காக சென்னைக்கு செல்ல வாய்ப்பில்லை. சான்றளிப்பு இயக்குனரகமும், வேளாண் பல்கலையும் அருகருகே இருப்பது தான் சிறப்பு. இதை இடம் மாற்றுவது வீண் வேலை. துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பெரும் சிரமம். தலைமையிடம் கோவையில் இருப்பதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை.எங்கு பயன், பயனாளிகள் அதிகம் இருக்கின்றனரோ அங்கு தான் அந்த அலுவலகம் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


'தவறான முடிவு'


latest tamil news


கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி கூறுகையில், ''வேளாண் பல்கலை இருக்கும் இடத்தில் தான் விதைச்சான்றளிப்புத்துறை இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் அந்த அலுவலகம், கோவையில் அமைக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் எல்லாமே கான்கிரீட் காடுகளாக மாறி விட்டன. அங்கு வேளாண்மை என்பதே இல்லை. அத்தகைய சூழலில், கோவையில் இருக்கும் அலுவலகத்தை சென்னை கொண்டு செல்வது தவறான முடிவு. அமைச்சர் அறிவித்தபடி, இயக்குனரகத்தை சென்னைக்கு மாற்றினால், எந்த நோக்கத்துக்காக அந்த இயக்குனரகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைந்து விடும். பாதிக்கப்படுவது விவசாயமும், விவசாயிகளும் தான்,'' என்றார்.


இங்கே இருப்பதே சிறப்பு!


latest tamil news


கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, கோவையில் இருப்பது தான் பல விதங்களிலும் சிறப்பு. கோவை சுற்றுப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் அங்ககச்சான்று பெற்றுள்ளனர். அதை முறையாக கண்காணிக்க வேண்டும் எனில், அந்த அலுவலகம் இங்கே இருந்தாக வேண்டும். நிர்வாக நலன் என்று கூறி, சென்னைக்கு கொண்டு செல்வது சரியல்ல,'' என்றார்.


'விளைபொருள் ஏற்றுமதி பாதிக்கும்'


விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கக சான்று (ஆர்கானிக் சான்று) பெற்றிருப்பது அவசியம். இந்த சான்று இல்லையெனில் ஏற்றுமதி செய்ய முடியாது. விளைபொருள் ஏற்றுமதி, அதற்கு அங்ககச்சான்று பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் மத்தியில் சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பலரும் வேதி உரங்களை தவிர்க்க தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில்,அங்கக சான்றளிப்புத்துறையை சென்னைக்கு கொண்டு செல்வது, இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
01-செப்-202115:44:14 IST Report Abuse
David DS எல்லா தலைமையகங்களையும் அறிவாலயத்துக்கு மாத்துங்க. பேரு தான் அறிவாலயம் ஆனா அங்க அறிவு தான் இருக்காது.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-202110:43:58 IST Report Abuse
Abdul Aleem சென்னைக்கு மாற்றுவதே சிறந்தது
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
01-செப்-202114:50:19 IST Report Abuse
தமிழ்வேள்விவசாயம் நீர்நிலைகள் அற்ற சென்னையில் , இவை என்னவென்றே அறியாத மக்கள் உள்ள சென்னையில் இந்த அலுவலகம் - விளங்கிடும் .........
Rate this:
Cancel
01-செப்-202109:23:14 IST Report Abuse
Thangarajan Kanagaraman அரசு கோவையை பழிவாங்க முடிவு செய்துள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X