பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

Added : செப் 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த
தமிழகம், பள்ளி, கல்லூரிகள், திறப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின.

அதேபோல், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.

தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகள் திறந்தன. 4 மாதம் கழித்து பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சகமாக வந்தனர். வளாகத்தில் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்தனர். அனைவரும் மாஸ்க் போட்டிருந்தனர். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி வேலை நாட்கள். புதுச்சேரியிலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன


latest tamil news
பள்ளி, கல்லூரி வளாகங்கள் முழுக்க கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சீருடையுடன் வரும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandhan - puducherry,இந்தியா
01-செப்-202116:11:53 IST Report Abuse
Anandhan பள்ளிகள் திறந்ததற்கு நன்றி. புதுவை மாநிலம் புராண சிங்குபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் கிடடதட்ட 800 மானவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இன்று பள்ளி திறந்து வகுப்புகள் நடைபெற தொடங்கி உள்ளது. ஆனால் மாணவர்கள் வந்து செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லை. அரசு சார்பில் இயக்கம் பேருந்துகளும் இயக்கப் படவில்லை. தனியார் பேருந்துகளும் மதகடிபட்டு வரை மட்டுமே இயக்கப் படுகிறது. மதகடிபட்டில் இருந்து புராணசிங்கு பாளையம் செல்ல பல மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இன்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு பல மாணவர்கள் நடந்து சென்றனர். எனவே மதகடிபட்டுடன் திரும்பும் பேருந்துகள் திருக்கனுர் வரை இயக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-செப்-202115:15:45 IST Report Abuse
Bhaskaran நுழைவு வாயில் நகரத்தந்தை சொந்த செலவில் கட்டி கொடுத்தாரா
Rate this:
Cancel
Amutha - Chennai,இந்தியா
01-செப்-202114:24:07 IST Report Abuse
Amutha 👆NO SOCIAL DISTANCE , NO FACE MASK, This photo is sufficient to Prove that Vivid 19 could spread among students and to others easily.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X