இந்த அசிங்கமான விவகாரத்தை மக்கள் மறந்து விட்டனர். நீங்கள்தான் நினைவு படுத்துகிறீர்கள்...

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
பா.ஜ., பொதுச் செயலராக இருந்த கே.டி.ராகவனின் செயலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆதரித்துள்ளார். 'உலகில் யாரும் செய்யாததையா ராகவன் செய்து விட்டார். அவர் வீட்டின் படுக்கை அறைக்குள் நடந்ததை படம் பிடித்தது தான் குற்றம்' என கூறியுள்ளார். இதன் மூலம் அவர், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவரும் இதுபோன்ற வழக்கில் முன்னர் சிக்கியுள்ளதால் தான் இப்படி
இந்த அசிங்கமான விவகாரத்தை மக்கள் மறந்து விட்டனர். நீங்கள்தான் நினைவு படுத்துகிறீர்கள்...

பா.ஜ., பொதுச் செயலராக இருந்த கே.டி.ராகவனின் செயலை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆதரித்துள்ளார். 'உலகில் யாரும் செய்யாததையா ராகவன் செய்து விட்டார். அவர் வீட்டின் படுக்கை அறைக்குள் நடந்ததை படம் பிடித்தது தான் குற்றம்' என கூறியுள்ளார். இதன் மூலம் அவர், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவரும் இதுபோன்ற வழக்கில் முன்னர் சிக்கியுள்ளதால் தான் இப்படி ஆதரவு அளிக்கிறார்.
- கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி


'இந்த அசிங்கமான விவகாரத்தை மக்கள் மறந்து விட்டனர். ஆனால், நீங்கள் தான் அடிக்கடி நினைவுபடுத்தி வருகிறீர்கள். இதன் மூலம், பா.ஜ.,வுக்கு கண்டனம் தெரிவிக்க முயன்று தோல்வி அடைகிறீர்கள்...' என, கூறத் துாண்டும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை.அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி விவசாயி அல்ல. தன்னை காப்பாற்றிக் கொள்ள பிரதமர் மோடி தயவு வேண்டும் என்று, விவசாயிகளின் விரோத சட்டங்களை ஆதரிப்பவர். இவரை வரலாறு மன்னிக்காது.
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'உங்கள் கட்சிக்கு, தி.மு.க.,வின் தயவு இருந்தால் போதும். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படியில்லையே... எனினும், உங்களின் குற்றச்சாட்டு தவறு தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.'தமிழகத்தின் வரலாறே; தமிழகத்தின் பாதுகாவலரே' என எனக்கு யாரும் போஸ்டர் வைத்து வரவேற்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம்முடையது வித்தியாசமான கட்சி. இங்கே யாரும் தனிநபர் வழிபாடு செய்யக் கூடாது. உங்களைப் போல நானும் கட்சி வளர்ச்சிக்காக என்னால் ஆன விதத்தில் பாடுபடுகிறேன்.
- தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


latest tamil news
'அருமை. இப்படி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்லி விட்டால், தமிழகம் 'போஸ்டர்'கள் இன்றி துாய்மையாகி விடும்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை.பிரதமர் மோடி அரசு, பொய் கனவுகளை விற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். அந்தப் பணியை வரவிருக்கும் உத்தர பிரதேச தேர்தலில் இருந்தே துவக்க வேண்டும். பா.ஜ.,வை தேச அரசியலில் இருந்து துார வைக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி


'இப்படித் தான், ஏழு ஆண்டுகளாக கூறி வருகிறீர்கள்; முடியவில்லையே...' என, சொல்லத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பில் இருக்கும் இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலில் அறிமுகப்படுத்திய, ஆப்கனுக்கு எதிரான தீர்மானத்தில், தலிபான்களை, 'பயங்கரவாதிகள்' என்று கூட குறிப்பிடாமல் உள்ளது. அவர்களை நினைத்து, இந்தியா நடுங்குவது தெரிகிறது!
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி


'உங்களுக்குத் தான், பா.ஜ.,வின் வளர்ச்சியை கண்டு நடுக்கம் போலும். அதனால் தான் இல்லாத, பொல்லாத விவகாரங்களை கூறுகிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04-செப்-202111:09:26 IST Report Abuse
தஞ்சை மன்னர் இப்படி ஒரு இனம் நம் தமிழகத்தில் நாம் வாழும் காலத்தில் இருப்பது அசிங்கம்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-செப்-202117:31:39 IST Report Abuse
r.sundaram இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் எழுப்புவதில் இருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிய வில்லையா? அடுத்தவன் படுக்கை அறைக்குள் கேமரா வைத்து வீடியோ எடுப்பது சரி என்கிறாரா? பெண்கள் விஷயத்தில் இதை விட மோசமாக நடந்து கொண்டனரே, அப்போது இவர் ஏன் மௌனமாக இருந்தார்? ஆக மருமகள் உடைத்தல் பொன்குடம், மாமியார் உடைத்தல் மண் குடமா?
Rate this:
Cancel
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
01-செப்-202116:24:21 IST Report Abuse
KM Prabhu ஹிந்து மதக் காவலர்கள் விளக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X