பொது செய்தி

தமிழ்நாடு

மனு கொடுத்ததெல்லாம் நடிப்பா? தி.மு.க., வேஷம் கலஞ்சு போச்சு: நீலச்சாயம் வெளுத்து போச்சு!

Added : செப் 01, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி முழுமையாக மருத்துவமனை பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்; கட்டண வாகன நிறுத்தம் செய்ய ஏலம் விடக்கூடாது,' என தி.மு.க.,வினர் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து வலியுறுத்தினர். ஆனால், இந்தாண்டு குத்தகையை தி.மு.க.,வினர் கைப்பற்றியுள்ளது, இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புற
மனு, நடிப்பு, தி.மு.க., வேஷம், கலஞ்சுபோச்சு,  நீலச்சாயம், வெளுத்து போச்சு, D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி முழுமையாக மருத்துவமனை பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்; கட்டண வாகன நிறுத்தம் செய்ய ஏலம் விடக்கூடாது,' என தி.மு.க.,வினர் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து வலியுறுத்தினர். ஆனால், இந்தாண்டு குத்தகையை தி.மு.க.,வினர் கைப்பற்றியுள்ளது, இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நாச்சிமுத்து பிரசவ விடுதி, 1956ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில், பாதுகாப்பாக இருப்பது; சத்தான உணவுகள் உண்பது போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். டாக்டர் பணியிடம் காலி போன்ற காரணங்களினால் பிரசவ விடுதியில் மகப்பேறு சிகிச்சைகள் அளிப்பதில்லை.தடுப்பூசி போடும் பணிகளும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையமாகவும் விளங்குகிறது. தற்போது, கொரோனா தடுப்பூசி போடும் இடமாக மாறியது.

நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு டாக்டர்கள், செவிலியர்கள் நியமித்து போதிய வசதிகளை மேம்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில், அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் குழந்தைகள் சிறப்பு வார்டு, மகப்பேறு பரிசோதனை மையம், புறநோயாளிகள் பிரிவு என, ஏதாவது ஒரு மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

பொள்ளாச்சியில் மருத்துவ சேவைக்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தை, நகராட்சி நிர்வாகம் வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி ஏலம் விட்டுள்ளது. இந்த, 'பார்க்கிங்' ஒப்பந்தத்தை ரத்து செய்து, முழு இடமும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, தி.மு.க.,வினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், சப் - கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தி.மு.க., பிரமுகரே இந்தாண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது, தி.மு.க.,வினர் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது.


latest tamil news
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நாச்சிமுத்து பிரசவ விடுதி, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மனு கொடுத்து முயற்சி எடுத்தது மகிழ்ச்சி அளித்தது. ஆட்சி மாறியதும், தி.மு.க.,வினரே 'பார்க்கிங்' பகுதியை ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சியே அவர்கள் கையில் உள்ள நிலையில், 'பார்க்கிங்' ஏல முறையை ரத்து செய்து, பிரசவ விடுதியை சிறந்த மருத்துவமனையாக மாற்றியமைக்க முயற்சி எடுத்திருந்தால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.ஆட்சியில் இல்லாத போது, மக்களுக்காக போராடுகிறோம் என்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் மக்களை மறந்து, சுயநலமாக சிந்திக்கின்றனர்.

இது மக்கள் ஆட்சி, என, முதல்வர் அறிவித்து செயலாற்றுகிறார். ஆனால், கட்சியினரோ எதில் சம்பாதிக்கலாம், என்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றனர். முதல்வரின் எண்ணம், செயலுக்கு, கட்சியினர் செயல் நிச்சியமாக முட்டுக்கட்டையாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ஏலத்தொகையை குறைத்தது ஏன்?பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி, 'வாகன கட்டண நிறுத்தம்' ஏலம், கடந்த முறை, 23 லட்சத்துக்கு சென்றது. இந்த முறை, 19 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு சென்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஏலத்தொகை உயர்த்தப்படும்; ஆனால், ஆளுங்கட்சியினருக்காக, அதிகாரிகள் கருணை காட்டி ஏலத்தொகை குறைந்துள்ளனர், என, எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டாக, பார்க்கிங் பகுதியில் வருமானம் இல்லை என, ஏலம் எடுத்தவர் கைவிட்டு விட்டார். நகராட்சி பணியாளர்களை கொண்டு நிர்வாகம் செய்வதில் சிரமமாக இருந்தது. அதனால், ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. வருவாயை கருத்தில் கொண்டு, முந்தைய ஏலத்தொகை குறைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
02-செப்-202115:38:50 IST Report Abuse
Hari இன்னுமா நீங்க தி மு க வை நம்புகிறீர்கள் சட்டுபுட்டுனு வீட்டுக்கு போங்க அங்கு தி மு க கட்ச்சிக்கொடி வீட்டின்மீது பறக்கப்போகுது.பொண்டாட்டி புள்ளைகளையாவது காப்பாத்துங்க இல்லையென்றால் அவர்களையும் இழப்பீர்கள் .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
01-செப்-202117:42:51 IST Report Abuse
DVRR சொல் செய். செய் சொல். இது தான் நல்லவர்களின் தாரக மந்திரம் அனால் ஒன்றிய மாவட்ட தி மு கவின் தாரக மந்திரம் சொல் ஒன்று ஊழல் ரெண்டு
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-செப்-202116:11:37 IST Report Abuse
மலரின் மகள் விடியலை நோக்கிய பயணம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. இப்படித்தான் பயணம் இருக்கும் என்றால், பயணம் நிற்கட்டும், திரும்பி செல்லட்டும்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
01-செப்-202117:53:48 IST Report Abuse
Srinivas....மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்....எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னால் பொள்ளாச்சி கொடூரத்தைப்போலவும், கொடநாடு கொலை கொள்ளை போலவும், சென்ற ஆட்சியில் கோயில் நிலங்களை இலவச பட்டா போட்டு கொடுத்ததை போலவும், கோயில் ஐம்பொன் சிலைகளை திருடி விற்றதைப் போலவும் இருக்கவேண்டும் அல்லவா? அடிமைகள் அரசு கஜானாவை எந்த அளவிற்கு துடைத்து வைத்துவிட்டுப்போயுள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஒவ்வொரு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். நாம் பாஜக அரசை கேட்பது உண்டா? ஏன் அவர்கள் சொன்ன பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலை குறைவதற்கு பதிலாக ஏறிக்கொண்டுள்ளது? இந்த விலை ஏற்றத்தின் காரணம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் வருகிறது. இது நாட்டிலுள்ள மக்களுக்கு மட்டும்தான் தெரியும். லண்டனிலிருந்து தெரியாது. பாஜக சொன்ன 15 லட்சம் பணம் எங்கே? ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவோம் என்று சொன்னவர்கள் எங்கே? வெளியில் வந்ததா? ஏன் வரவில்லை? இதெல்லாம் லண்டனிலிருந்து பார்க்கமுடியாது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X