சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சைபர் க்ரைம்' போலீஸ் உதவியுடன் தகவல் திருட்டு: கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரர் மோசடி அம்பலம்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை: பல்லடம் கார் டிரைவர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை போலீஸ்காரர், 'சைபர் க்ரைம்' போலீஸ் உதவியுடன் மொபைல்போன் தகவல் திரட்டியது அம்பலமாகியுள்ளது.சிவகங்கையை சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் தாராபுரம் சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பி
சைபர் க்ரைம், போலீஸ், உதவி, தகவல்திருட்டு, கடத்தல், போலீஸ்காரர், மோசடி, அம்பலம்

கோவை: பல்லடம் கார் டிரைவர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை போலீஸ்காரர், 'சைபர் க்ரைம்' போலீஸ் உதவியுடன் மொபைல்போன் தகவல் திரட்டியது அம்பலமாகியுள்ளது.

சிவகங்கையை சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் தாராபுரம் சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பி கொண்டிருந்தார்.பல்லடம் அருகே வந்தபோது மூன்று கார்களில் வந்த நபர்கள் மகேஸ்வரனை கடத்தி சென்றனர்.

விசாரணையில், தங்கம் கடத்தலில் ஈடுபடும் கும்பல் முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கடத்தி சென்றது தெரியவந்தது. இதன்அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கடத்தப்பட்ட மகேஸ்வரன், அவரது நண்பர்கள் இருவர் மற்றும் காரை மீட்டனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனரின் கார் டிரைவாக பணியாற்றி வந்த ராஜேஸ்வரன், 27 என்ற போலீஸ்காரரும் ஒருவர்.


latest tamil news


போலீஸ்காரர் ராஜேஸ்வரன், 'சைபர் க்ரைம்' போலீசார் சிலர் உதவியுடன், மகேஸ்வரனின் மொபைல்போன் அழைப்பு விபரங்கள், இருப்பிடம் போன்ற தகவல்களை எடுத்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை வைத்து தான் கடத்தல் கும்பல், திட்டம் தீட்டி பல்லடம் அருகே கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.'சைபர் க்ரைம்' போலீசாரில் சிலர், பணத்துக்காக ரகசிய தகவல்களை கசியவிடுவது உறுதியாகியுள்ளது. இவர்கள் யார் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது.


'மிகவும் ஆபத்தான செயல்'


போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:'சைபர் க்ரைம்' சம்பந்தமான புகார்கள் சி.சி.டி.என்.எஸ்., அல்லது தேசிய குற்ற ஆவண பிரிவு(என்.சி.ஆர்.பி.,) இணையதளம் வாயிலாகவும், நேரடியாக போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து கொடுப்பதாலும் பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் புகார்களில் சி.ஆர்., எண் பதிவாகியிருக்கும். இதுபோன்று பெறப்பட்ட புகார்களுக்கு மட்டுமே, தேவைப்படும் மொபைல்போன் அழைப்பு மற்றும் குறிப்பிட்ட நபரின் சி.டி.ஆர்.,(வாடிக்கையாளர் விபர அறிக்கை) வழங்கப்பட வேண்டும்.

அதுவும் போலீசில் அனுமதிக்கப்பட்டுள்ள 'நோடல்' அதிகாரி மூலம் மட்டுமே விபரம் கேட்கப்பட வேண்டும்.' நோடல்' அதிகாரி தவிர வேறு யாருக்கும் இந்த விபரங்களை கொடுக்க கூடாது. ஆனால், இதை மீறி சிலர் தவறான வழிகளில் தகவல் எடுக்கின்றனர். இந்த தகவல்களை வைத்து குற்ற செயல்கள் நடக்கின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். தவறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தகவலுக்கு ரூ.10 ஆயிரம்!


மொபைல்போன் அழைப்பு விபரங்கள் போன்ற தகவல்களை திருட்டுத்தனமாக எடுத்து கொடுக்க, 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப் படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்களை வைத்து கொலை, கடத்தல் போன்ற குற்றங்கள் நிகழ்கின்றன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் ராஜேஸ்வரன், தங்க நகை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், தங்க நகை கடத்தல் கும்பலுக்கும் இதேபோன்று, தேவையான ரகசிய தகவல்களை எடுத்து கொடுத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
01-செப்-202117:52:55 IST Report Abuse
r.sundaram இது இவர்கள் அரசாங்கத்துக்கு செய்யும் பச்சை துரோகம். கைநீட்டி சம்பளம் வாங்கும் அரசுக்கே இவர்கள் துரோகம் செய்கிறார்கள். திருடர்களுக்கு செய்திகள் கொடுப்பதே போலீஸ் தான் என்றால் இவர்களை மன்னிக்க முடியுமா? இதனாலேயே பெரும்பான்மையான சிறு குற்றங்கள் போலீசுக்கு போவதில்லை. இவர்களிடம் இருந்தே செய்திகள் கசிந்து விடுமோ என்ற பயமே காரணம்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
01-செப்-202120:16:28 IST Report Abuse
தமிழ்வேள்இதை தடுக்க ஒரே வழி , சிக்கும் கருப்பு ஆடுகளை என்கவுண்டர் செய்து ஒழித்துவிடுவதுதான் ..பிறகு அடுத்தவன் இந்த வேலையை செய்யமாட்டான் ....இன்று இப்படி ...நாளை தேசத்துரோகம் ......கட்டுமர கட்சி தமிழகத்தில் தலையெடுத்தபின்புதான் போலீஸ் துறை கேட்டுகுட்டிச்சுவராகியது ..எல்லாப்புகழும் கட்டுமரத்துக்கே ........
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-செப்-202117:18:17 IST Report Abuse
அசோக்ராஜ் அடேயப்பா ... கூகிள் நினைச்சா ஒரு நாட்டையே தகர்க்க முடியும் போல இருக்கே. பயமா இருக்குது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-செப்-202116:25:05 IST Report Abuse
Natarajan Ramanathan காசு கொடுத்தால் காவல்துறை/போலீஸ் தனது மனைவி செல்போன் தகவலைகூட விற்றுவிடுவான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X