பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 'சோலார்' நிலையம்: மின் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: ‛‛சென்னையில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, தலைமை செயலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பசுமை மின்சாரம் வினியோகிக்கும் பணியை, மின் வாரியம் துவக்குமா?'' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகில், மின் வாரியத்திற்கு, பல ஏக்கரில் நிலம் உள்ளது. அங்கு, ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனம், எரிவாயு மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியான
CHENNAI, SOLAR, STATION, ELECTRIC, DISTRUBUTE, சென்னை, சூரியசக்தி, மின்சாரம், தயாரிப்பு, எதிர்பார்ப்பு

சென்னை: ‛‛சென்னையில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, தலைமை செயலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பசுமை மின்சாரம் வினியோகிக்கும் பணியை, மின் வாரியம் துவக்குமா?'' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகில், மின் வாரியத்திற்கு, பல ஏக்கரில் நிலம் உள்ளது. அங்கு, ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனம், எரிவாயு மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியான மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்பனை செய்தது. அந்நிறுவனத்திடம் அதிக விலைக்கு மின் சாரம் வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 2015ல், ஜி.எம்.ஆர்., நிறுவனத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அது நீட்டிக்கப்படவில்லை. அந்நிறுவனத்திடம் இருந்து, மின் வாரியம், 2018ல் நிலத்தை திரும்பப் பெற்றது. அந்த இடத்தில், மின் வாரியம், சொந்த செலவில், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை தலைமை செயலகத்திற்கு வினியோகிக்க திட்டமிட்டது.


latest tamil news


மேலும், சென்னையின் மின் தேவை அதிகரித்து வருவதால், பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள இடத்தில் சூரியசக்தி மின் நிலையத்திற்கு பதில், 730 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. எரிவாயு மின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டதில், பேசின்பிரிட்ஜ் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால், எண்ணுாரில் மூடப்பட்டுள்ள அனல் மின் நிலைய இடத்தில், எரிவாயு மின் நிலையம் அமைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. இதனால், எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள இடத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, தலைமை செயலகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு மட்டும் வினியோகிக்கும் பணியை, மின் வாரியம் துரிகதியில் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

மின் வாரியம், பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள இடத்தில், சூரியசக்தி மின் நிலையம் மட்டுமின்றி, மின் உற்பத்தி, மின் வினியோகம், மின் தொடரமைப்பை காட்சிப்படுத்த கூடிய அருங்காட்சியகமும் அமைக்கலாம். இது, இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மின்சாரம் தொடர்பான விபரங்களை பொது மக்களும் அறிந்து கொள்ள முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
01-செப்-202113:00:12 IST Report Abuse
vpurushothaman இம்மாதிரி நல்ல காரியங்களைச் செய்ய அரசு முன்வரவில்லை. எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குவது எப்படி என்பதில் செலுத்துகின்ற கவனத்தை இது போன்ற செயல்களில் செலுத்தலாமே ?
Rate this:
01-செப்-202119:01:30 IST Report Abuse
Vittal anand rao.இல்லை. கட்டுமரத்தின் புகழ் பரப்புவதில், பிராமண்ணை துன்புறுத்துவத்திலும் தான் ஆட்சி நடக்கிறது....
Rate this:
Cancel
01-செப்-202112:01:32 IST Report Abuse
ஆரூர் ரங் ஜி எம் ஆர் நிறுவனம் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் அரசின் அவசரத் தேவைக்கு மின்சாரம் தயாரித்துத் தந்தது🙄. அதில் அனல் மின் நிலையம் போல குறைந்த செலவில் மின் உற்பத்தி சாத்தியமில்லை. கூடுதலாக விலை கொடுக்க பட்டது என்பது தவறான தகவல்
Rate this:
01-செப்-202118:56:27 IST Report Abuse
Vittal anand rao.குறுகிய காலத்திற்கு உடநடித் தே வைக்கு நிலக்கரி அல்லது gas. பயன் படும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X