ஆப்கனில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த பிரிட்டன் தயார்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
லண்டன்: காபூல் விமான நிலையத்தில் முன்னதாக பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்ட 169 ஆப்கானிஸ்தான் குடிமக்களும் 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் மரணம் அடைந்த சம்பவம் உலகையே அச்சுறுத்தியது.இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல்
ஆப்கன், ஐஎஸ், பயங்கரவாதிகள், ராக்கெட் தாக்குதல், பிரிட்டன்,

லண்டன்: காபூல் விமான நிலையத்தில் முன்னதாக பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்ட 169 ஆப்கானிஸ்தான் குடிமக்களும் 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் மரணம் அடைந்த சம்பவம் உலகையே அச்சுறுத்தியது.

இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல் அளித்தது.


latest tamil news



இது தொடர்பாக பிரிட்டன் விமானப்படை தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் வசிக்கும் 2 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை மீது ராக்கெட் தாக்குதல் நடத்த பிரிட்டன் விமானப்படை திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க பென்டகன் இதற்கு ஒத்துழைத்தால் இந்த தாக்குதலை மேற்கொள்ள போரிஸ் ஜான்சன் அரசு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் மீட்பு விமானங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில் அவர் இதனை மிக தைரியமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த யாரும் ஆப்கானிஸ்தானில் இல்லை என்ற காரணத்தால் தற்போது இந்த இரு நாடுகளின் வீரர்கள் பயங்கர தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-செப்-202121:25:26 IST Report Abuse
Vijay D Ratnam மாட்டை தொழுவத்துல கட்டி வச்சி அடிச்சாத்தான் அடி சிந்தாமல் சிதறாமல் விழும். ஒரு ஆறு மாதம் விட்டு வைத்தால் போதும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் எல்லாம் ஆப்கனில் குவிந்துவிடுவார்கள். அப்புறமென்ன தெருநாய்கள் ஒரே இடத்தில கூடினால் என்ன நடக்கும். ஒன்றை ஒன்று கடித்து குதறி சண்டை போட தொடங்கும். அப்போது ஆப்கன் அப்பாவி மக்களை காப்பாற்ற போகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஐநா, மனித உரிமை, மாட்டு உரிமை, ரெட் கிராஸ், ப்ளூ கிராஸ் கனவான்களின் ஆதரவோடு அமேரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இந்தியா, ஜப்பான், ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் எல்லோரும் உள்ளே புகுந்து நின்று நிதானமாக மொத்தமா வச்சி செஞ்சு உட்டுடலாம். இந்தியாவுக்கு இதுதான் நல்ல சமயம் பாகிஸ்தான் மீது ஒட்டுமொத்த உலகநாடுகளும், குறிப்பாக பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளும் கடும்கோபத்தில் இருக்கின்றன. நம்ம தமிழ்நாட்ல இருக்குற மாதிரி ஒரு தத்தி தற்குரித்தான் அங்குட்டும் இருக்கு. POK வை மீட்டுக்கொள்ள நல்ல சந்தர்ப்பம் வாய்த்து இருக்கிறது. இங்கே சில ஓநாய்கள் வழக்கமாக ஊளையிடும். அது எப்போதும் ஊளைமட்டும்தான் இடும். அதை கண்டுகொள்ள வேண்டியதில்லை. பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தலைமை பாதுகாப்பு படைத்தலைவர் பிபின் ராவத் என்று செம்ம ஃபார்மில் இருக்கிறது இந்தியா. அந்த ஓநாய்களை வழக்கம்போல கண்டுக்கொள்ளாமல் போட்டுத்தாக்க வேண்டும். நேரு கோட்டைவிட்ட பகுதிகளை வேட்டையாடி மீட்க அருமையான சந்தர்ப்பம்.
Rate this:
Cancel
SANKARANARAYANAN S - chennai,இந்தியா
01-செப்-202121:21:27 IST Report Abuse
SANKARANARAYANAN S அமெரிக்காவுக்கு :இப்போ புரியுதா? நாங்க காஷ்மீர்ல எப்படி போராடுறோம்னு
Rate this:
Cancel
SANKARANARAYANAN S - chennai,இந்தியா
01-செப்-202121:17:23 IST Report Abuse
SANKARANARAYANAN S தரையில் நேருக்கு நேர் சண்டை போட துப்பில்லை. வான் வழி தாக்குதலாம் அட போங்கடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X