பொது செய்தி

இந்தியா

எனது அரசு கொரோனாவுக்கு எதிரானது: உத்தவ் தாக்கரே

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகளை விதித்த மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும், கொரோனாவுக்குதான் எதிரானது என கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் வெகு விமர்சியாக நடைபெறும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா
Not AntiHindu, AntiCorona, Uddhav Thackeray, Irresponsible, BJP, Maharashtra, Ganesh Chaturthi, மஹாராஷ்டிரா, முதல்வர், உத்தவ் தாக்கரே, கொரோனா, எதிர், இந்துக்கள், பாஜக, பாஜ

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகளை விதித்த மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும், கொரோனாவுக்குதான் எதிரானது என கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் வெகு விமர்சியாக நடைபெறும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மஹா.,விலும் முதல்வர் உத்தவ் தாக்கரே கட்டுப்பாடு விதித்தார். இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்ததுடன், கண்டன போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:


latest tamil news


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள மற்றும் மஹாராஷ்டிர அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின்போது மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை பா.ஜ.,வினருக்கு காட்டுகிறோம். எனது அரசு இந்துக்களுக்கு எதிரானதல்ல, கொரோனாவுக்குதான் எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202121:48:58 IST Report Abuse
அப்புசாமி என்னது? உனது அரசா? நீ உக்காந்திருக்குற நாற்காலியில் மூணு கால் சரத் பவார் கட்சியோடது. இதுல உனது அரசுன்னு வறட்டு ஜம்பம் வேறயா?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
01-செப்-202121:09:46 IST Report Abuse
bal சரி...ஏன் பார்கள் திறந்திருக்கின்றன.
Rate this:
Cancel
01-செப்-202120:06:20 IST Report Abuse
Vittal anand rao. ஜாரே தூ ரண்டபோரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X