சென்னை: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று (செப்.,1) தஞ்சாவூர் எம்எல்ஏ., நீலமேகம் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஏற்கெனவே அண்ணா சாலையில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு சிலை இருக்கும் நிலையில் தற்போது கருணாநிதிக்கும் சிலை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.