பொது செய்தி

தமிழ்நாடு

'2 மாடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு லிப்ட் கட்டாயம்'

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: ‛‛இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும்,'' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் இன்று (செப்.,1) வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான, லிப்ட் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Lift, Mandatory, Building, Tamilnadu, லிப்ட், கட்டாயம், கட்டடங்கள், தமிழக அரசு

சென்னை: ‛‛இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும்,'' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று (செப்.,1) வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான, லிப்ட் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும். 2 அடுக்குகளுக்கு மேலான கட்டடங்களில் சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும். மேலும், பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதேபோல, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ,தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம் , நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் 6,000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உடன் இந்த 6,000 குடியிருப்புகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-செப்-202122:03:42 IST Report Abuse
Ramesh Sargam வீட்டுக்கு ஒரு கழிப்பறை இருக்கவேண்டும் என்று கூடவே ஒரு ஆணை பிறப்பித்திருந்தால் நல்லது. இன்றும், மாநகர் சென்னையின் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஏதாவது ஒரு சொம்பில் தண்ணீருடன் அருகில் உள்ள தண்டவாளங்களை அருகில் காலை கடனை 'கழிக்க' செல்கிறார்கள். இன்றும் அதுபோன்ற நிகழ்வுகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் நடக்கிறது. காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் வரும் பயணிகள் அப்படிப்பட்டவர்கலை பார்த்துக்கொண்டுதான் வரவேண்டியிருக்கிறது. கர்மம் கர்மம்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
01-செப்-202121:10:27 IST Report Abuse
bal முழு சென்னையை இடிக்க வேண்டும்...யாரு இந்த பைத்தியம்...
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
01-செப்-202116:16:22 IST Report Abuse
Sri பழைய அரசு குவார்டர்ஸ் பழைய ப்ரைவேட் ப்ளாட்ஸ் தரைதளம் +3 மாடி கட்டங்கள் வசிப்பவர்களுக்கு ஒரு உடற்பயிற்சியால் படிக்கட்டுகள் இருந்தன.₹8 லட்சம் லிஃப்ட் விலை அதற்காக 140 ச்துர அடி ஓவ்வோர் தளத்திலும் ஒதுக்கீடு மற்றும் அதிக மின்சார செலவு நடுத்தர மக்கள் பர்ஸை பதம் பார்த்துவிடும்..தேவையற்ற சட்டங்கள் முன்னேற்றம் விடியல் அல்ல ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X