2 மாடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு லிப்ட் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'2 மாடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு லிப்ட் கட்டாயம்'

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (5)
Share
சென்னை: ‛‛இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும்,'' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் இன்று (செப்.,1) வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான, லிப்ட் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Lift, Mandatory, Building, Tamilnadu, லிப்ட், கட்டாயம், கட்டடங்கள், தமிழக அரசு

சென்னை: ‛‛இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும்,'' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று (செப்.,1) வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான, லிப்ட் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும். 2 அடுக்குகளுக்கு மேலான கட்டடங்களில் சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும். மேலும், பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதேபோல, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ,தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம் , நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் 6,000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உடன் இந்த 6,000 குடியிருப்புகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X