பொது செய்தி

இந்தியா

ஆகஸ்டில் இந்தியாவின் 3 முக்கிய சாதனைகள்

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜிடிபி 20.1 சதவீதம் உயர்வு; ஒரே நாளில் 1.33 கோடி தடுப்பூசி செலுத்தியது; பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு என, இந்தியா மூன்று முக்கிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.ஒரே நாளில் 1.33 கோடி தடுப்பூசி இந்தியாவில் இதுவரை 65.41 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஆக.,31ம்

புதுடில்லி: உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜிடிபி 20.1 சதவீதம் உயர்வு; ஒரே நாளில் 1.33 கோடி தடுப்பூசி செலுத்தியது; பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு என, இந்தியா மூன்று முக்கிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.



latest tamil news




ஒரே நாளில் 1.33 கோடி தடுப்பூசி


இந்தியாவில் இதுவரை 65.41 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஆக.,31ம் தேதி மட்டும் மிக அதிக அளவாக, ஒரே நாளில் 1.33 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 1.33 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




ஜிடிபி 20.1% உயர்வு


கடந்த ஆண்டு கோவிட் ஊரடங்கால், வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் 24.4 சதவீதம் எதிர்மறையாகச் சென்றது. இந்நிலையில், மத்திய பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான, 2021-22 ஆண்டின் ஏப்ரல் - ஜூன் வரை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதமாக அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

மதிப்பு ரீதியில் நாட்டு ஜிடிபி ரூ.32,38,020 கோடி அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.26,95,421 கோடியாக இருந்தது. கோவிட் பொதுமுடக்கத்தால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




பங்கு சந்தை உயர்வு


இந்தியாவில் கோவிட் 2வது அலையின் பாதிப்பு பங்கு சந்தையிலும் எதிரொலித்து. இதனால் தொடர்ந்து பங்குச் சந்தை சரிவைக் கண்டது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த 30ம் தேதி பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அதிக அளவாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் உயர்வடைந்தன.

இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத வகையில் 576.94 புள்ளிகள் உயர்ந்து 56,701.66 புள்ளிகளாக (1.03 சதவீதம்) உயர்ந்துள்ளது.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இதுவரை இல்லாத வகையில் 167.75 புள்ளிகள் உயர்ந்து, 16,872.95 புள்ளிகளாக (1.03 சதவீதம்) உயர்ந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில் டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், மாருதி சுசுகி இந்தியா, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ ஆகியவற்றின் பங்குகள் லாபநோக்கத்துடன் காணப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202108:09:12 IST Report Abuse
ravi chandran ஒன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இரண்டு சமையல் எரிவாயு விலை மூன்று வாகனம் இன்சூரன்ஸ் அதிகரிப்பு. வாழ்க மோடி.
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
01-செப்-202122:05:26 IST Report Abuse
Believe in one and only God மூணு விதமான வரி போட்டு இருக்கும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
01-செப்-202119:32:59 IST Report Abuse
Duruvesan ராவுள், susai,பிரசாந்த் கீசோறு நமக்கு இந்தியா முன்னேறினா ஆவாது, எதுனா பண்ணு, NYT, NDTV, சன் எல்லாத்துலயும் மோடி ஒயிக எல்லாம் போச்சி அப்டின்னு குய்யோ மரியோன்னு கத்த சொல்லு, அப்புறம் அந்த செத்தாம்பரம் ட்வீட் panna சொல்லு, tool kid ready பண்ணு, சிங் எல்லாம் பிரியாணி மட்டும் துன்னா போதாது போராட்டம் எல்லா வூர்லயும் பண்ண சொல்லு, ஷ் அப்பா கண்ண கட்டுதே, பக்கிஸ் இல்ல சீனா காரன் எழுதுன கட்டுரை சன் நியூஸ், விகடன்,நோக்கீரன் எல்லாத்துலயும் வரணும், வருங்கால ஜனாதிபதி விடியலு வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X