பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் தாழிட்டுக் கொண்ட குழந்தை: தீயணைப்பு படை மீட்பு

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டு 5 மணிநேரம் போராடிய ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் மேங்கில்ஸ்ரோடு பகுதியில் கே.எஸ்.ஆர் என்ற அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர் சிவகாமி நாதன். இவருடைய ஒன்றரை வயது குழந்தை ஆஷிவ் அதர்வா வீட்டினுள் உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டது. இதையடுத்து வெளியே
வீட்டுக்குள் தாழிட்டுக் கொண்ட குழந்தை: தீயணைப்பு படை மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டு 5 மணிநேரம் போராடிய ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் மேங்கில்ஸ்ரோடு பகுதியில் கே.எஸ்.ஆர் என்ற அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர் சிவகாமி நாதன். இவருடைய ஒன்றரை வயது குழந்தை ஆஷிவ் அதர்வா வீட்டினுள் உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டது. இதையடுத்து வெளியே வரமுடியாமல் கத்தி கதறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


latest tamil news



இந்த தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்துக்கு வந்து 5 மணி நேரமாக போராடிய குழந்தையை திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் வித்யாபதி, சரவணன், அகஸ்டின், பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஹைட்ராலிக் டோர் ஓபனர் மூலமாக கதவு திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதற்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. இதையடுத்து 5 மணிநேரம் போராடிய குழந்தை மீட்கப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-202108:20:58 IST Report Abuse
 rajan பெரியவர்கள் கவனமுடன் இருங்கள். வீட்டில் உள்ள அறைகளின் கதவுகள் முழுவதும் மூடாதபடி தடுப்பு வையுங்கள். கதவின் மேல் ஒரு டவலை போட்டு வையுங்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-செப்-202123:19:40 IST Report Abuse
Bhaskaran அபார்ட்மெண்ட்டில் மிகவும் நெருங்கியநண்பர்கள் இருந்தால் அவர்களிடம் ஒரு சாவி கொடுத்து வைக்கவும் .மயிலையில் எங்கள் அபார்ட்மெண்டில் மூன்றுபேர் அம்மாதிரி கொடுத்து வைத்துள்ளோம் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-செப்-202122:15:09 IST Report Abuse
Ramesh Sargam குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X