விடாது பெய்யும் தொடர் கனமழை: டில்லிக்கு ஆரஞ்சு அலர்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விடாது பெய்யும் தொடர் கனமழை: டில்லிக்கு 'ஆரஞ்சு அலர்ட்'

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021
Share
புதுடில்லி: டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. பல முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டில்லியில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கி குளம்

புதுடில்லி: டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. பல முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தலைநகர் டில்லியில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.


போக்குவரத்து பாதிப்பு


கனமழை காரணமாக டில்லியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஐ.டி.ஓ., உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் பல கி.மீட்டர் தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன.


latest tamil news



இந்நிலையில், 'டில்லியில் இன்று இரவுக்குள், 19 - 20 செ.மீ., அளவுக்கு கன மழை நீடிக்கும். விடாது பெய்து வரும் கன மழையால், டில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இம்மாதம் டில்லியல் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X