அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் வித்தியாசமான அரசியலை சட்டசபையில் காண்பிக்க வேண்டும்: அண்ணாமலை

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
தூத்துக்குடி: ‛'தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என சொன்ன தி.மு.க.,வினர், வித்தியாசமான அரசியலை சட்டசபையில் தான் காண்பிக்க வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர்
BJP, Annamalai, Different Politics, DMK, Assembly, பாஜக, அண்ணாமலை, பாஜ, திமுக, வித்தியாசமான அரசியல், சட்டசபை

தூத்துக்குடி: ‛'தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என சொன்ன தி.மு.க.,வினர், வித்தியாசமான அரசியலை சட்டசபையில் தான் காண்பிக்க வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு மக்களுடைய பழக்கங்களையும், உணர்வுகளை மதிக்கக்கூடிய வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


latest tamil news


தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் நலனுக்கான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் புனரமைக்கப்பட்டதன் மூலம் தியாகிகள் வரலாறு சிதைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மட்டுமே குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரமைக்கப்பட்டதை ‛அழகு' என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளார். எனவே, கட்சிக்குள்ளேயே முரண் கருத்துக்கள் உள்ளது. பிரதமர் மோடி, தலைமையிலான அரசு, தியாகிகள் நினைவிடத்தை செம்மைப்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.


latest tamil news


கடந்த 1958 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் முந்தைய முதல்வரின் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும். அதன்படி, பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனும் சட்டசபையில் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என தி.மு.க.,வினர் சொன்னார்கள். அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டசபையில் தான் காண்பிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை அதன் பெயரிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பா.ஜ., வலியுறுத்துகிறது. தமிழக அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
02-செப்-202106:44:50 IST Report Abuse
Raman அதுக்கு நீ முதலில் தேர்தலில் நின்று ஜெயித்து சட்ட மன்றத்துக்கு போகணும்.. முடியுமோ ?
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
02-செப்-202104:07:13 IST Report Abuse
Ram அண்ணாமலை சார் எல்லோரையும் சிஸ்டர் அக்கா அப்படி தான் கூப்பிடுவார் -
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
02-செப்-202104:05:37 IST Report Abuse
Ram குழந்தய தொட்டில தூங்கவும் விட்டு கிள்ளியும் விட்டு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X