பொது செய்தி

தமிழ்நாடு

கூலித்தொழிலாளி பெயரில் போலி கம்பெனி துவங்கி வரி ஏய்ப்பு: அதிகாரிகள் அதிர்ச்சி

Added : செப் 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வேலுார்: ஆம்பூர் அருகே, பெண் கூலித் தொழிலாளி பெயரில் போலி கம்பெனி தொடங்கி வரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே மேல்மிட்டாளத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 50. அங்குள்ள தோல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறார். இவர் மனைவி கிருஷ்ணவேணி, 42. சின்னவரிகத்தில் உள்ள ஷூ கம்பெனியில் கூலித்தொழிலாளியாக
கூலித்தொழிலாளி பெயரில் போலி கம்பெனி துவங்கி வரி ஏய்ப்பு: அதிகாரிகள் அதிர்ச்சி

வேலுார்: ஆம்பூர் அருகே, பெண் கூலித் தொழிலாளி பெயரில் போலி கம்பெனி தொடங்கி வரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே மேல்மிட்டாளத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 50. அங்குள்ள தோல் தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறார். இவர் மனைவி கிருஷ்ணவேணி, 42. சின்னவரிகத்தில் உள்ள ஷூ கம்பெனியில் கூலித்தொழிலாளியாக இருக்கிறார்.
வேலுாரில் இருந்து வணிகவரித்துறை அதிகாரிகள் இன்று கோவிந்தசாமி வீட்டுக்கு ஜீப்பில் வந்தனர். அப்போது உங்கள் மனைவி கிருஷ்ணவேணிக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் விற்கும் கம்பெனி சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ளது. கம்பெனி கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்காமல், வணிக வரித்துறைக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளதால் அவரிடம் விசாரிக்க வந்ததாக கூறினர்.
இதை கேட்டு கோவிந்தசாமியும், கிருஷ்ணவேணியும் அதிர்ச்சியடைந்தனர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்களிடம் எப்படி கம்பெனிகள் இருக்கும் என்று கூறி அதற்கான ஆதாரங்களை காட்டினர். அப்பகுதி மக்களிடமும், அவர்கள் வேலைக்குச் செல்லும் இடங்களிலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கூலி வேலைக்குச் சென்று பிழைத்து வருவது தெரியவந்தது.
இதனால் கிருஷ்ணவேணியின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆதாரங்களை பெற்ற யாரோ சிலர் அவரது வீட்டு முகவரியில், அவர் பெயரில் முறைகேடாக சென்னையில் கம்பெனி தொடங்கி வரி ஏய்ப்பு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் கிருஷ்ணவேணிக்கும் அவர் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று அவர் எழுதிக் கொடுத்தார். துறை ரீதியாக நடக்கும் விசாரணைக்கு அழைக்கும் போது வந்து செல்லும்படி அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணவேணி கம்பெனியில் பல லட்சம் ரூபாய் வரி கட்டவில்லை என்பதால் அவரது மேல்மிட்டாளம் முகவரிக்கு பல முறை கடிதங்கள் அனுப்பியும் பதில் வரவில்லை. இதனால் அவரது வீட்டுக்கே வந்த போது அவர் பெயரில் மர்ம நபர்கள் போலி கம்பெனி தொடங்கப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணவேணி தான் கூலி வேலை செய்யும் ஷூ கம்பனியிலும், ஆம்பூரில் உள்ள ஒரு மைக்ரோ பைனான்சில் கடன் பெறவும் தனது ஆதார் அட்டை, பான் கார்டு, இருப்பிட சான்று, போட்டோக்கள் கொடுத்துள்ளார். அதை தவறாக பயன்படுத்தி போலி கம்பெனி தொடங்கியுள்ளனர். போலி கம்பெனி தொடங்கியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
06-செப்-202110:37:59 IST Report Abuse
suresh kumar இந்த ரெய்டால் வேலையிழந்த கோவிந்தசாமியும், கிருஷ்ண வேணியும் இனி வருமானத்திற்கு என்ன செய்வார்கள்?
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
07-செப்-202115:01:19 IST Report Abuse
Hariநல்லதையே எழுதுங்கள் உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும் நக்கல் வேண்டாம், ப்ரோ....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-செப்-202115:52:05 IST Report Abuse
Bhaskaran அதிகாரிகள் நல்லாசியுடன் தான் இம்மாதிரி துணிந்து செய்யமுடியும் இப்போ அந்த அதிகாரிகள் ஓய்வுபெற்றிருப்பாங்க அல்லது கப்பம் சரியாக கட்டளையோ என்னமோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X