சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்கேயம் அருகே லாரி-வேன் மோதல்: சேலத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஊதியூர்: காங்கேயம் ஊதியூர் அருகே லாரியும், ஆம்னி வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கோவலக்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் கவுதம் (27) இவரது மனைவி சபிதா (22), இவர்களது 1 வயது குழந்தை வருண்ஆதிக் மற்றும் கவுதமின் அம்மா ஜெயக்கொடி(47) ஆகியோருடன் இவர்களது
காங்கேயம் அருகே லாரி-வேன் மோதல்: சேலத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

ஊதியூர்: காங்கேயம் ஊதியூர் அருகே லாரியும், ஆம்னி வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கோவலக்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் கவுதம் (27) இவரது மனைவி சபிதா (22), இவர்களது 1 வயது குழந்தை வருண்ஆதிக் மற்றும் கவுதமின் அம்மா ஜெயக்கொடி(47) ஆகியோருடன் இவர்களது உறவினர்களான எடப்பாடி தாலுக்கா, பொன்னாபுரம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி(28), கண்ணன் என்ற தரணிஸ்வரன் (18), கனிமொழி (11), பிரகதீஷ் (5) ஆகிய எட்டு பேரும் சேலத்திலிருந்து நேற்று முன்தினம் காலை ஆம்னி வேனில் பழனிக்குச் சென்றுள்ளனர்.
பழனியில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர் நேற்று முன்தினம் இரவு கிளம்பி பழனியில் இருந்து தாராபுரம் - காங்கேயம் வழியாக சேலத்திற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ஆம்னியை கவுதம் ஓட்டி வந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் ஊதியூர் அருகே குட்டை காடு என்னும் பகுதியில் எதிரே இமாச்சல பிரதேசத்தில் இருந்து பூண்டு லோடு ஏற்றி வந்த லாரியும், பக்தர்கள் சென்ற ஆம்னி வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது.
சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து விபத்துக்குள்ளான வேனில் இருந்து படுகாயங்களுடன் இருந்த எட்டு பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே கவுதம்(27) மற்றும் கவுதமின் 1 வயது குழந்தை வருண்ஆதிக் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற ஆறு பேருக்கும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மற்ற 6 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கவுதமின் அம்மா ஜெயக்கொடி(48) சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6:30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X