பள்ளிகள், அலுவலகங்கள் திறப்பால் ஜூம் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி!

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கலிபோர்னியா: கோவிட் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே வேலை மற்றும் கல்வியை தொடர வேண்டிய சூழல் ஏற்பட்ட போது ஜூம் எனும் வீடியோ கான்ப்ரன்ஸ் செயலி உலகளவில் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்புவதால் அமெரிக்க பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் ஒரே நாளில் சுமார் 17 சதவீதம் சரிவை சந்தித்தது.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஜூம் செயலி கடந்த
Zoom Shares, Record, Worst, WFH, Surge Ends, ஜூம் செயலி, ஜூம், நிறுவனம், பங்குகள், வீழ்ச்சி

கலிபோர்னியா: கோவிட் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே வேலை மற்றும் கல்வியை தொடர வேண்டிய சூழல் ஏற்பட்ட போது ஜூம் எனும் வீடியோ கான்ப்ரன்ஸ் செயலி உலகளவில் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்புவதால் அமெரிக்க பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் ஒரே நாளில் சுமார் 17 சதவீதம் சரிவை சந்தித்தது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஜூம் செயலி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலிபோர்னியாவில் இந்நிறுவன தலைமையகம் அமைந்துள்ளது. 2020-ல் ஊரடங்கு அறிவிக்கும் முன்பு வரை இச்செயலி அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஐ.டி., நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் வீட்டிலிருந்த படி இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு இச்செயலி உதவிகரமாக அமைந்ததால் உடனே பிரபலமானது. அலுவலக ஆலோசனைக் கூட்டங்கள், பாடங்கள் நடத்துவது என பலவும் இச்செயலி மூலம் செய்யப்பட்டன.


latest tamil news


இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் 2019 டிசம்பர் வரை தவழ்ந்து கொண்டிருந்த இந்நிறுவன பங்குகள் ராக்கெட் வேகத்தில் ஏற தொடங்கியது. 2019 டிசம்பரில் ஒரு பங்கின் விலை சுமார் 70 டாலருக்கு விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில், மளமளவென ஏறி அக்டோபரில் 559 டாலருக்கு வந்தது. சுமார் 8 மடங்கு லாபத்தில் வர்த்தகானது. அன்றைக்கு ஜூம் செயலியின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடியாக இருந்தது. அதன் பின் உலகளவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வர அனுமதிக்கப்பட்டார்கள்.


latest tamil news


இதனால் ஜூம் செயலியின் எதிர்கால பயன்பாடு குறையும் என முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அக்டோபர் உச்சத்திற்கு பின் படிப்படியாக சரிவை சந்தித்து வந்தது. நேற்று (ஆக.,31) ஒரே நாளில் 15 சதவீத வீழ்ச்சியை ஜூம் பங்குகள் சந்தித்துள்ளன. அக்டோபரில் சுமார் ரூ.12 லட்சம் கோடியாக இருந்த அதன் சந்தை மதிப்பு தற்போது பாதியாக குறைந்து ரூ.6.2 லட்சம் கோடியாகியிருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
01-செப்-202120:48:30 IST Report Abuse
Vena Suna நல்ல செய்திதான் .இது ஒரு சீன செயலி .தங்களுக்கு நட்டம் வரக் கூடாது என்று அவர்கள் மறுபடியும் கொரோனாவை பரப்பக் கூடும் .நாம் உஷாராக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-செப்-202119:34:37 IST Report Abuse
Ramesh Sargam பள்ளி மாணவர்களின் படிப்பு முக்கியமா, அல்லது ஜூம் நிறுவனத்தின் வளர்ச்சி முக்கியமா? ஒரு நிறுவனம் லாபம் ஈட்ட வேண்டுமென்பதற்காக பள்ளி குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிடலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X