கடலூர்:அரசு நூலகங்களுக்கு 33 ஆயிரம் புத்தகங்கள்அனுப்பும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர்:அரசு நூலகங்களுக்கு 33 ஆயிரம் புத்தகங்கள்அனுப்பும் பணி தீவிரம்

Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
கடலூர்:மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள புத்தகங்கள்அரசு நுாலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடலுார், சொரக்கல்பட்டில் மாவட்ட மைய நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். 1 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.மாவட்ட மைய நுாலகத்தின் கீழ் குழந்தைகள்
கடலூர்:அரசு நூலகங்களுக்கு  33 ஆயிரம் புத்தகங்கள்அனுப்பும் பணி தீவிரம்

கடலூர்:மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள புத்தகங்கள்அரசு நுாலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலுார், சொரக்கல்பட்டில் மாவட்ட மைய நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். 1 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.மாவட்ட மைய நுாலகத்தின் கீழ் குழந்தைகள் நுாலகம் ஒன்று, கிளை நுாலகங்கள் 65, ஊர்ப்புற நுாலகங்கள் 45, பகுதி நேர நுாலகங்கள் 23 உட்பட 142 நுாலகங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றின் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் பயனடைகின்றனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் கடந்த மே10ம் தேதி முதல் அனைத்து நுாலகங்களும் மூடப்பட்டன. வாசகர்கள் சிரமம் அடைந்தனர்.

போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியர் பாதிப்படைந்தனர்.இதற்கிடையே தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த ஜூலை 12ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் நுாலகங்கள் திறக்கப்பட்டு, இயங்கிவருகின்றன. தொடர்ந்து வாசகர்கள் நுாலகத்திற்கு வரத் துவங்கினர்.

இந்நிலையில்,ஒவ்வொரு ஆண்டும் தமிழக பொது நுாலகத் துறை சார்பில், பல பதிப்பகங்களில் இருந்து புதியபுத்தகங்கள் வாங்கி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட மைய நுாலகத்திற்கு அனுப்பப்படும். பின்,அங்கிருந்து கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகம், பகுதி நேர நுாலகங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்புவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தமிழக பொது நுாலகத்துறை சார்பில், கடலுார் மாவட்டத்தில் உள்ள நுாலகங்களுக்குத் தேவையான புதிய புத்தகங்கள் மாவட்ட மைய நுாலகத்திற்கு கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 2018, 19ம் ஆண்டு பதிப்பு நுால்கள் 33 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன. அதில் போட்டித் தேர்வுகள், மருத்துவம், கலை, இலக்கியம், நாவல்,கட்டுரை, சமயம், அறிவியல், கவிதை உட்பட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்புத்தகங்களை மாவட்ட மைய நுாலகத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள 30 நுாலகங்களுக்கு 800 முதல் 1,200புத்தகங்கள் வரை பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.தொடர்ந்து அடுத்தடுத்து வரவுள்ள புத்தகங்கள் மற்ற நுாலகங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X