பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரலாம்: கலெக்டர் பாலசுப்ரமணியம் பேட்டி

Added : செப் 01, 2021
Share
Advertisement
கடலுார்:மாணவர்கள்அச்சமின்றி பள்ளிக்கு வந்து படிக்கலாம் என, கலெக்டர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு
 மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரலாம்: கலெக்டர் பாலசுப்ரமணியம் பேட்டி

கடலுார்:மாணவர்கள்அச்சமின்றி பள்ளிக்கு வந்து படிக்கலாம் என, கலெக்டர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என ,469 பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.

கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, துறைமுகம் அரசு மகளிர் பள்ளி, திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் பள்ளியில் ஆய்வு செய்த அவர், கூறியதாவது;பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமிநாசினி மூலம் கை சுத்தம் செய்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளி பின்பற்றி வகுப்புகளில் 20 மாணவர்கள் அமர வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 94 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறதா என வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர், பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிக்கு வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, கடலுார் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X