சம்பவம் செய்தி

தமிழ்நாடு

50க்கும் மேற்பட்ட திருமணங்கள்திருவந்திபுரத்தில் குவிந்த மக்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கடலுார்:முகூர்த்த நாளன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு சாலையில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில், கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை. கோவிலை சுற்றியுள்ள தனியார் மண்டபங்கள், வீடுகளில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேண்டுதலில் பலரும் கோவில் முன்பு சாலையில் நின்றபடி

கடலுார்:முகூர்த்த நாளன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு சாலையில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில், கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை. கோவிலை சுற்றியுள்ள தனியார் மண்டபங்கள், வீடுகளில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேண்டுதலில் பலரும் கோவில் முன்பு சாலையில் நின்றபடி தாலிகட்டிக்கொள்கின்றனர்.அந்த வகையில், ஆவணியில் முதல் முகூர்த்தமான கடந்த 20ம் தேதி நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.

தொடர்ந்து, 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. முகூர்த்த நாளான நேற்றும் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருவந்திபுரம் கோவில் முன் நடந்தது.இதனால், திருவந்திபுரத்தில் அதிக அளவில் மக்கள் குவிந்தனர். இதனால், காலை 9:00 மணிக்கு பிறகே கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு முகக்கவசமின்றி வந்தவர்களுக்கு திருப்பாதிரிப்புலியூர் போலீசார் முகக்கவசங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X