பொது செய்தி

தமிழ்நாடு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
கடலுார்:கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:மாவட்டத்தில் கடலுார் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021ம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் 15.09.2021ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை

கடலுார்:கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:மாவட்டத்தில் கடலுார் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021ம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் 15.09.2021ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய www.skiltrainin.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்க்கவும். அரசுதொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் 750 ரூபாய் உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது.பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.இந்த இணையதளம் வழியிலான நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X