பொது செய்தி

தமிழ்நாடு

தாலிக்கு தங்கம் திட்டம் :3.34 லட்சம் பேர் காத்திருப்பு

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை ''சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.அவரது பதிலுரை:கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவி தொகை திட்டத்தில், இதுவரை, 127 பேர் பயன் அடைந்துள்ளனர். பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அரசு பஸ்களில், இலவசமாக பயணம் செய்யலாம் என, முதல்வர் உத்தரவிட்டார். இதுநாள்
 தாலிக்கு தங்கம், திட்டம் அரசு ,புதிய விதிமுறைகள், அறிவிப்பு

சென்னை ''சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

அவரது பதிலுரை:

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவி தொகை திட்டத்தில், இதுவரை, 127 பேர் பயன் அடைந்துள்ளனர். பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அரசு பஸ்களில், இலவசமாக பயணம் செய்யலாம் என, முதல்வர் உத்தரவிட்டார். இதுநாள் வரை, 6.50 கோடி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும், முட்டை கொள்முதல் செய்வதற்கான, 'டெண்டர்' முறை சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசின் செலவினம் குறைக்கப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. முதல்வர் ஒப்புதல் பெற்று நிரப்பப்படும்.


latest tamil newsகடந்த ஆட்சியில், ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள், முறையாக செயல்படுத்தப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் உண்மைத் தன்மை விசாரிக்கப்படவில்லை. திருமணமாகி, மூன்று ஆணடுகளாகியும், திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை.

தாலிக்கு தங்கம் எனப் பெயர் வைத்திருந்தாலும், தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை. இதனால், ஏழை தாய்மார்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிலுவை திருமண உதவித்தொகை, 28 ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த, 2019 மார்ச் வரை மட்டுமே வழங்க முடிந்தது. தாலிக்கு தங்கம், நான்கு கிராம் என்றிருந்ததை, எட்டு கிராமாக, கடந்த ஆட்சியாளர்கள் உயர்த்தினர். ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது, 3.34 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருச்சி ஆகிய இடங்களில், 37.17 கோடி ரூபாயில், பெண்களுக்
கான தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன. சென்னை, வடபழநியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில், 822 படுக்கைகளுடன் கூடிய, பணிபுரியும் பெண்களுக்கான அரசு மகளிர் விடுதி கட்ட, ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது, துரித நடவடிக்கை எடுக்க, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு, வாடகை வாகனம் எடுத்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 புதிய வாகனங்கள், 1.39 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202111:22:10 IST Report Abuse
அப்புசாமி அரசு வேலைக்கு பதிவு பண்ணி காத்திருந்து கடைசியில் வேலை கிடைக்காம பென்சன் வாங்குறவங்க மாதிரி, தாலிக்கு தங்கம் வர்ர வரைக்கும் காத்திருந்து கன்னி கழியாமலேயே போயிருவாங்க. 60 ம் கல்யாணத்திற்கு தங்கம் கிடைக்குமான்னு பாக்கலாம்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
02-செப்-202110:11:03 IST Report Abuse
vbs manian thangam varuvatharkul muhurtham thaandi poiy vidum.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-செப்-202108:37:59 IST Report Abuse
duruvasar திராவிட பாரம்பரியமான திருமணத்திற்கு பின்வரும் காதல் வயப்படும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பதுடன் ஊக்கத்தொகை மும், அரசு வேலையும் கொடுக்க உரிய சட்டம் கொண்டுவர அமைச்சர் முதல்வரிடம் பேசவேண்டும். ஏனெனில் சரக்கும் மிடுக்கும் உள்ள ஆட்களை கொண்ட முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது. பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த மற்றொறு முள்ளையும் நீக்க நல்ல தருணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X