சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழக முதல்வர் ஸ்டாலின்: போதை தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை ஊக்குவிக்க, அரசு நிச்சயம் தயங்காது. எனவே, எந்த வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டுமோ அதை பரிசீலித்து, அவர்களுக்குரிய 'ரிவார்டு' நிச்சயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.'டவுட்' தனபாலு: 'மாநிலம் முழுவதும் உள்ள போதை பொருட்களை அழித்து விடுங்கள்; அது தொடர்பாக யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள்'


'டவுட்' தனபாலு

தமிழக முதல்வர் ஸ்டாலின்: போதை தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை ஊக்குவிக்க, அரசு நிச்சயம் தயங்காது. எனவே, எந்த வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டுமோ அதை பரிசீலித்து, அவர்களுக்குரிய 'ரிவார்டு' நிச்சயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'டவுட்' தனபாலு: 'மாநிலம் முழுவதும் உள்ள போதை பொருட்களை அழித்து விடுங்கள்; அது தொடர்பாக யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள்' என இன்று, முதல்வர் உத்தரவிட்டால், நாளையே தமிழகத்தை, போதை இல்லாத மாநிலமாக நம் போலீசார் ஆக்கி விடுவர். போலீஸ் நிலையங்களுக்கு சென்று, தி.மு.க.,வினர் 'பஞ்சாயத்து' செய்வரே; ஊர் ஊருக்கு கஞ்சா விற்பனையாளர்களிடம், 'டீல்' பேசுகின்றனரே... அவர்களை என்ன செய்வீர்களோ என்பதே, போலீசாரின், 'டவுட்!'

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
தேசிய அளவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது. பா.ஜ., மக்களை பிரிக்கிறது; காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது.

'டவுட்' தனபாலு: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சியாக காங்கிரஸ் இருந்திருந்தால், சிறுபான்மையினர் அனைவரும் உங்கள் கட்சியில் தானே இருந்திருக்க வேண்டும்; முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உருவாகி இருக்காதே. சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்று வெறுமனே கூறி, ஓட்டு வங்கி அரசியலுக்கு மட்டும் தான் காங்கிரஸ் முயற்சிக்கிறது. எனினும், காங்கிரசின் சூழ்ச்சியை சிறுபான்மையின கட்சிகள் அறிந்து கொண்டுள்ளன. அதை உங்களைப் போன்ற மாநில தலைவர்கள் தான் அறியவில்லையோ என்பது தான், 'டவுட்'டாக உள்ளது!


சிவசேனா மாநில தலைவர் ரவிச்சந்திரன்
: தமிழகத்தில் கொேரானா பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. சமீபத்தில் திரையரங்குகள் கூட திறக்கப்பட்டன. ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த, ஒட்டு மொத்த தடை விதித்திருப்பது மிகப் பெரிய ஏமாற்றத்தை தருகிறது.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள, தி.மு.க., அரசு தான், விநாயகர் சதுர்த்தியை தடை செய்யும் நோக்கில், கொரோனாவை காரணம் காண்பித்து, பொதுஇடங்களில் பூஜை, ஊர்வலத்திற்கு தடை செய்துள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், கடந்த ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியின் போதும், விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் கொண்டாடப்படவில்லையே!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-செப்-202115:28:13 IST Report Abuse
D.Ambujavalli போலீசுக்கு உங்கள் ரிவார் டைவிட கற்பக விருட்சமாகக் கிடைக்கும் மாமூல் தான் பெரிதாகத் தெரியும். ஐவரும் தான் போதை பொருளாலேயே கொழிக்கும் கட்சியினருக்கு கடிவாளம் எதுவும் போட மாட்டார்
Rate this:
Cancel
02-செப்-202108:23:05 IST Report Abuse
சமநிலை மூர்த்தி அப்போ டாஸ்மாக் போதை லிஸ்ட்ல வராதோ. பின்னர் ஏன் மது ஒழிப்பு போலீஸ் துறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X