தடுப்பூசி சான்று பதிவிறக்கத்தில் சிக்கல் தவறான தகவலால் குழப்பமோ குழப்பம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை தாலுகா பகுதியில், தடுப்பூசி போடும் மக்கள் தவறான தகவல்கள் தருவதால், சான்றிதழ் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.ஆனைமலை தாலுகா பகுதிகளில், தினமும் குறைந்தபட்சமாக, 1,500 முதல் அதிகபட்சமாக, மூவாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவோரிடம், ஆதார் எண் மற்றும் மொபைல்போன் எண் பெறும் செவிலியர்கள், தடுப்பூசி செலுத்தியோருக்கு இணைய வழி

ஆனைமலை:ஆனைமலை தாலுகா பகுதியில், தடுப்பூசி போடும் மக்கள் தவறான தகவல்கள் தருவதால், சான்றிதழ் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

ஆனைமலை தாலுகா பகுதிகளில், தினமும் குறைந்தபட்சமாக, 1,500 முதல் அதிகபட்சமாக, மூவாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவோரிடம், ஆதார் எண் மற்றும் மொபைல்போன் எண் பெறும் செவிலியர்கள், தடுப்பூசி செலுத்தியோருக்கு இணைய வழி சான்றிதழ் வழங்க 'கோவின்' இணையதளத்தில் பதிவு செய்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் பயன்பாட்டில் இல்லாத மொபைல்போன் எண் மற்றும் தவறான தகவல்கள் கொடுப்பதால், சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதேபோல், குறைந்த அளவிலான செவிலியர்கள் பணியில் இருப்பதால், அவர்களே தடுப்பூசியும் செலுத்தி, மக்களின் தகவல்களையும் சேகரித்து, ஆன்லைனிலும் பதிவு செய்கின்றனர்.இதனால், தகவல்களை பதிவு செய்வது தாமதமாவதுடன், பணிச்சுமையால் பல நேரங்களில் மொபைல்போன் எண்ணை தவறாக பதிவு செய்கின்றனர். பெயரை பிழையுடன் பதிவு செய்கின்றனர். மொபைல் எண்ணை தவறாக பதிவு செய்வதால், சான்றிதழ் கிடைக்காமல் அத்தியாவசிய பணிகளுக்கு மாநிலங்களுக்குள் பயணிக்கும் டிரைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க சுகாதாரத்துறை, தடுப்பூசி செலுத்துவோரின் தகவல்களை பதிவு செய்ய தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும். அல்லது, தன்னார்வலர்களை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். அதேபோல், மக்களும் புழக்கத்தில் இருக்கும் மொபைல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X