சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கிகளை குறி வைக்கும் கும்பல்: கண்டறிய போலீசார் தீவிரம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் சவுத் இந்தியன் வங்கியில் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, கும்பலலை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் சவுத் இந்தியன் வங்கியில், 2018, டிச., 27ம் தேதி வங்கி பின்பக்கம் ஜன்னல் கம்பியை அறுத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.'லாக்கர்' உடைத்து பணம், நகை கொள்ளையடிக்க முயன்றபோது, 'லாக்கர்'

ஆனைமலை:ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் சவுத் இந்தியன் வங்கியில் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, கும்பலலை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் சவுத் இந்தியன் வங்கியில், 2018, டிச., 27ம் தேதி வங்கி பின்பக்கம் ஜன்னல் கம்பியை அறுத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.'லாக்கர்' உடைத்து பணம், நகை கொள்ளையடிக்க முயன்றபோது, 'லாக்கர்' திறக்க முடியாததால், மர்ம நபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டனர். மோப்பநாய் கண்டறியாமல் இருக்க, விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கரைத்து தெளித்து தப்பினர்

இதே வங்கியில், 2019ல் இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி நடந்தது. 2020 பிப்.,ல் மாரப்பகவுண்டன்புதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், ஜன்னல் கம்பியை அறுத்து பணம், நகை திருட முயன்றனர்.இந்நிலையில், கடந்த பிப்., 19ம் தேதி சவுத் இந்தியன் வங்கியில் மூன்றாவது முறையாக, ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது. இந்த நான்கு சம்பவத்திலும், ஒரே மாதிரியான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு, 'காஸ் கட்டர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது.இதனால், ஒரே கும்பல், வங்கிகளை குறி வைத்து தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சிப்பது உறுதியாகிறது.

மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து நான்கு சம்பவங்கள் நடந்தும், போதிய அளவு துப்பு கிடைக்காமல் ஆனைமலை போலீசார் திணறுகின்றனர். தற்போது, மாவட்ட எஸ்.பி.,யின் அழுத்தத்தை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய கடந்த, இரண்டு வாரங்களாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பல முக்கிய தடயங்கள் கிடைத்து உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X