பொது செய்தி

தமிழ்நாடு

504 இடங்களில் விநாயகர் சிலை ஹிந்து முன்னணி தீர்மானம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்டத்தில், 504 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய, ஹிந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம், பொள்ளாச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். கோவை கோட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலசந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அண்ணாதுரை

பொள்ளாச்சி:கோவை தெற்கு மாவட்டத்தில், 504 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய, ஹிந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம், பொள்ளாச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். கோவை கோட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலசந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வரும், 10ம் தேதி நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில், மாவட்டம் முழுவதும், 504 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மதுக்கரை, ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு, ஆனைமலை கோட்டூர், கோமங்கலம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், வரும்,12ம் தேதியும்; பொள்ளாச்சி, வடக்கிப்பாளையம், நெகமம் ஆகிய பகுதிகளில், 13ம் தேதியும் சமூக இடைவெளி கடைபிடித்து விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆடி மாத வழிபாட்டில் ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு ஆவண செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட, ஹிந்துக்கள் ஆர்வமாக உள்ள நிலையில், முட்டுக்கட்டை போடும் முயற்சியை கைவிட வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X