செய்திகள் சில வரிகளில்...திருப்பூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திருப்பூர்

Added : செப் 01, 2021
Share
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைஉடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கலை மற்றும் வணிகவியல் துறையில், இதுவரை, 400 பேர் சேர்ந்துள்ளனர். நேற்றுமுன்தினம், கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் உள்ள இளநிலைப் பிரிவுகளுக்கு, கலந்தாய்வு நடந்தது.மேல்நிலைப் பள்ளி வகுப்பில்,

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கலை மற்றும் வணிகவியல் துறையில், இதுவரை, 400 பேர் சேர்ந்துள்ளனர். நேற்றுமுன்தினம், கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் உள்ள இளநிலைப் பிரிவுகளுக்கு, கலந்தாய்வு நடந்தது.

மேல்நிலைப் பள்ளி வகுப்பில், அறிவியல் பாடப் பிரிவுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், ஒன்று முதல் 500 இடங்களைப் பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.அவ்வகையில், கணிதப் பாடப்பிரிவில் 19; புள்ளியியல் பாடப் பிரிவில், 2; இயற்பியல் பாடப்பிரிவில், 28; வேதியியல் பாடப் பிரிவில், 38; தாவரவியல் பாடப்பிரிவில், 14; கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில், 54 பேர் என, மொத்தம், 755 மாணவர்கள் சேர்ந்தனர். இத்தகவலை கல்லுாரி முதல்வர் கல்யாணி, தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் செயல்படும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அயல்நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.omcl நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், 500 நர்சிங் மாணவர்களுக்கு தொழில் சார் ஆங்கிலத்தேர்வு பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பணிகாலியிடங்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும், பதிவு செய்யவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம், www.omcmanpower.com வழியாக தெரிந்து கொள்ளலாம்.விவரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண், 0421 - -2999152 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளைநிலத்தில் பழவகை மரங்கள்

வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலம், வனமாக மாற்றும் வகையிலும், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும், மரக்கன்றுகள் நடப்பட்டது.உடுமலை, சங்கராமநல்லுார் தெற்கு, குப்பம்பாளையத்திலுள்ள, டாக்டர் மேகலாவிற்கு சொந்தமான, 3 ஏக்கர் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.

இங்கு, தேக்கு, சந்தனம், குமிழ், செம்மரம், வன்னி, தான்றி மற்றும் பழவகை மரங்கள் என, 1,018 மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றிலும் பாதுகாப்பு வேலி, சொட்டு நீர்ப்பாசன வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்க விரும்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X