சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அத்துமீறி அமைத்த விளம்பரங்கள் அகற்றம்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக நடவடிக்கை இரும்பு பிரேம்களை கழற்றவும் அறிவுறுத்தல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம் மற்றும் வடக்கு ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், 'தினமலர்' செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டனபொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொது இடம் மற்றும் தனியார் கட்டடங்களில், அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சி
 அத்துமீறி அமைத்த விளம்பரங்கள் அகற்றம்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக நடவடிக்கை  இரும்பு பிரேம்களை கழற்றவும் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம் மற்றும் வடக்கு ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், 'தினமலர்' செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டன

பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொது இடம் மற்றும் தனியார் கட்டடங்களில், அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சி பகுதிக்குள், தனியார் கட்டடங்கள் மற்றும் நிலங்களில், வாகன ஓட்டுனர்கள் கவனத்தை சிதறடிக்கும் வகையில், விதிமீறி விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள, விளம்பர பலகையால் வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறி விபத்துக்குள்ளாகும் சூழல் இருந்தது.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அபாயங்கள் குறித்து 'தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி, அனுமதியில்லாத விளம்பர பலகை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, பொள்ளாச்சி - கோவை ரோட்டில், தனியார் கட்டடத்தின் மீது இருந்த விளம்பர பலகையை அப்புறப்படுத்தினர். அங்கு விளம்பர பலகை மீண்டும் வைக்க கூடாது என, கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

அதேபோன்று, வடக்கு ஒன்றியத்தில், விதிமீறி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற, ஒன்றிய ஆணையாளர் மோகன் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் விதிமீறல் விளம்பர பலகைகளை அகற்ற ஒன்றிய நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது.

கோவை தேசிய நெடுஞ்சாலை, நடுப்புணி ரோடு, சங்கம்பாளையம் மேம்பாலம் பகுதிகளில், அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'விளம்பர பலகைகள் அகற்றியது மட்டுமின்றி, அதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு பிரேம்களையும் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் விளம்பரங்கள் வைப்பார்கள்.

மேலும், இயற்கை சீற்றத்துக்கு, பிரமாண்ட இரும்பு பிரேம்கள் சரிந்து, அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகை அகற்றப்பட்டுள்ளது. தனியார் கடை மீது விளம்பரம் வைக்க உள்ள இரும்பு பிரேமை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. விளம்பரம் வைத்தவர்களே அகற்றிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X