பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் சாகுபடியில் கோவக்காய் விவசாயிகள் ஆர்வம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், பாகற்காய், பீர்க்கன், புடலை என பல்வேறு வகையான பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பந்தல் சாகுபடியில், கோவக்காய் சாகுபடியிலும் உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்பகுதிகளில் உற்பத்தி செய்யும் கோவக்காய், அதிகளவு கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு செல்கிறது. உள்ளூர் மார்க்கெட்டிலும், இக்காய்
 பந்தல் சாகுபடியில் கோவக்காய் விவசாயிகள் ஆர்வம்

உடுமலை:உடுமலை பகுதிகளில், பாகற்காய், பீர்க்கன், புடலை என பல்வேறு வகையான பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பந்தல் சாகுபடியில், கோவக்காய் சாகுபடியிலும் உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்பகுதிகளில் உற்பத்தி செய்யும் கோவக்காய், அதிகளவு கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு செல்கிறது. உள்ளூர் மார்க்கெட்டிலும், இக்காய் விற்பனையாகிறது.

விவசாயிகள் கூறியதாவது : மருத்துவ குணம் கொண்ட கோவக்காய், இயற்கை முறையில் சாகுபடி செய்தால், கூடுதல் பலன் கிடைக்கும். இதில், கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.ரத்த சுத்தி, சரும பாதிப்பு, கண் நோய், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கு, கோவக்காய், சிறந்து மருந்தாக உள்ளது.

பீன்ஸ், புடலை போன்றே, இதையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். நடவு செய்து, 60ம் நாளில் கொடிகள் படர ஆரம்பித்து, 70ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும். ஆண்டுக்கு சராசரியாக, ஒரு ஏக்கருக்கு 24 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது, கிலோ, 25 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X