துணை சபாநாயகர் தேர்வு

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:துணை சபாநாயகர் தேர்தலை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.டில்லி உயர் நீதிமன்றத்தில், பவன் ரேலே என்ற மனுதாரர், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியலமைப்பின், 93வது சட்டப்பிரிவை மீறும் வகையில், லோக்சபா

புதுடில்லி:துணை சபாநாயகர் தேர்தலை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

.டில்லி உயர் நீதிமன்றத்தில், பவன் ரேலே என்ற மனுதாரர், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியலமைப்பின், 93வது சட்டப்பிரிவை மீறும் வகையில், லோக்சபா துணை சபாநாயகரின் பதவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. கடந்த 830 நாட்களாக, அந்த பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. இனியும் நியமிக்கப்படாவிட்டால், அது, லோக்சபா மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சிதைக்க வழிவகுக்கும்.

எனவே, உடனடியாக துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த, சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பொதுநல மனு குறித்து பதிலளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம், தலைமை நீதிபதி கூறுகையில், “நாங்கள் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை. இதை அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X