பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைது; கண்டித்து கட்சியினர் சாலை மறியல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் முன், அ.தி.மு.க.,வினர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர், விழுப்புரம் ஜெ., பல்கலையை, அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க கூடாது; இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., -

சேலம்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் முன், அ.தி.மு.க.,வினர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர், விழுப்புரம் ஜெ., பல்கலையை, அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க கூடாது; இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மதியம், 2:50 முதல், 3:10 மணி வரை நடந்த மறியலால், போக்குவரத்து பாதிக்கப்பட, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதேபோல், மேட்டூரில் எம்.பி., சந்திரசேகரன் தலைமையிலும், இடைப்பாடியில் அ.தி.மு.க., நகர செயலர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மாவட்டம் முழுதும் பல இடங்களில், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X