பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் 35 பதவிக்கு தேர்தல்; ஓட்டுப்போட 1.27 லட்சம் வாக்காளர்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: ஊரக உள்ளாட்சியில், 35 பதவிக்கு ஓட்டுப்போட, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 189 பேர் அடங்கிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், கடந்த ஜூன், 30 வரை ஏற்பட்டுள்ள, 35 பதவிக்கு தேர்தல் நடத்த ஏதுவாக, நேற்று, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஊராட்சியில், 10வது வார்டு, ஒன்றியத்தில், 9வது வார்டு, 10 ஊராட்சி தலைவர்கள். தவிர, ஊராட்சி வார்டு உறுப்பினர், 23

சேலம்: ஊரக உள்ளாட்சியில், 35 பதவிக்கு ஓட்டுப்போட, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 189 பேர் அடங்கிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், கடந்த ஜூன், 30 வரை ஏற்பட்டுள்ள, 35 பதவிக்கு தேர்தல் நடத்த ஏதுவாக, நேற்று, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஊராட்சியில், 10வது வார்டு, ஒன்றியத்தில், 9வது வார்டு, 10 ஊராட்சி தலைவர்கள். தவிர, ஊராட்சி வார்டு உறுப்பினர், 23 பேர் இடத்துக்கு வாக்காளர் பட்டியல், சம்பந்தப்பட்ட நிர்வாகம் முறையே, மாவட்ட ஊராட்சி, 16 ஒன்றியம், 10 ஊராட்சிகளில், தனித்தனியே வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அளவில் வாக்காளர் விபரம் வருமாறு: ஆத்தூர் - 433, அயோத்தியாப்பட்டணம் - 14,725, இடைப்பாடி - 5804, கொளத்தூர் - 724, மேச்சேரி - 8492, நங்கவள்ளி - 2804, ஓமலூர் - 52,707, பனமரத்துப்பட்டி - 7547, பெத்தநாயக்கன்பாளையம் - 645, சேலம் - 5232, சங்ககிரி - 113, தலைவாசல் - 4062, தாரமங்கலம் - 13,450, வாழப்பாடி - 394, வீரபாண்டி - 9569, ஏற்காடு - 488 பேர். இதில், ஆண் வாக்காளர், 65 ஆயிரத்து, 26 பேர், பெண் வாக்காளர், 62 ஆயிரத்து, 161 பேர், திருநங்கை, 2 பேர் என, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 189 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X