அஸ்தானா நியமனத்தை எதிர்த்து மனு: மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. குஜராத்தில் இருந்து 1984ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான ராகேஷ் அஸ்தானா, எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். கேள்விஓய்வுக்கு நான்கு நாட்கள்

புதுடில்லி:டில்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

குஜராத்தில் இருந்து 1984ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான ராகேஷ் அஸ்தானா, எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.


கேள்வி

ஓய்வுக்கு நான்கு நாட்கள் இருந்த நிலையில், அவர் டில்லி போலீஸ் கமிஷனராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.இந்த நியமனத்தை எதிர்த்து, வழக்கறிஞர் சதர் ஆலம் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா' என, கேள்வி எழுப்பியது. இதற்கு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ''இந்த விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

இந்த பொது நல மனுவை, கடந்த மாதம் 25ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'டில்லி போலீஸ் கமிஷனராக அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரண்டு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்துக்கு உத்தர விட்டது.இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நடந்தது.


ஒத்திவைப்பு

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: டில்லி போலீஸ் கமிஷனராக அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து மனு தொடர, இடைத்தரகர் களுக்கு அனுமதியளிக்க கூடாது. இது ஒன்றும், ராம் லீலா மைதானமோ, ஜந்தர் மந்தரோ அல்ல. உயர் நீதிமன்றம். ஆலமுக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ, அஸ்தானா நியமனத்தை எதிர்க்க எந்த காரணமும் இல்லை. உரிமையும் இல்லை.

இதை அனுமதித்தால், அரசு நியமனங்கள் ஒவ்வொன்றையும் எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்படும். மேலும், ஆலம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவின் பிரதியை போல் உள்ளது. இந்த விவகாரத்தில் உறுதியான பதில் அளிக்க, மத்திய அரசுக்கு அவகாசம் தேவை.இவ்வாறு அவர் கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,'ஆலம் தாக்கல் செய்த மனு, தொண்டு நிறுவன மனுவின் பிரதியல்ல' என்றார்.இதையடுத்து, அஸ்தானா நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X