பொது செய்தி

தமிழ்நாடு

திருட்டு அதிகரிப்பு: எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில், வளாகம் முழுதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காமராஜர் சாலை மும்முனை சந்திப்பில் உயர்மின்கோபுரம், ராணிப்பேட்டை முதல் உடையார்பாளையம் வரை, சாலை நடுவே, 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் விளக்குகள் உள்ளன. இவையனைத்தும் பழுதாகி எரியவில்லை. பஸ்

ஆத்தூர்: ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில், வளாகம் முழுதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காமராஜர் சாலை மும்முனை சந்திப்பில் உயர்மின்கோபுரம், ராணிப்பேட்டை முதல் உடையார்பாளையம் வரை, சாலை நடுவே, 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் விளக்குகள் உள்ளன. இவையனைத்தும் பழுதாகி எரியவில்லை. பஸ் ஸ்டாண்டில் பஸ் வெளிச்சத்தில் தான் பயணியர் செல்லும் நிலை உள்ளது. பிரதான சாலையில் உள்ள மின்விளக்கு, உயர்மின் கோபுர விளக்கு எரியாததால், இருள் சூழ்ந்த நகரமாக மாறிவிட்டது. இதனால் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகராட்சி நிர்வாகம், ஆத்தூர் டவுன், ஊரகம், போக்குவரத்து பிரிவு போலீசாரும், போதிய கண்காணிப்பு பணி மேற்கொள்ளாததால், திருட்டு அதிகரிக்கிறது. மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X