சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 01, 2021
Share
Advertisement
காந்தி, நேரு குறித்து அவதுாறு புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், 'பாலிவுட்' நடிகை பாயல் ரோஹத்கி மீது போலீசில் ஒரு புகார் அளித்தனர். அதில், மஹாத்மா காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் குறித்து, பாயல் ரோஹத்கி அவதுாறு 'வீடியோ' தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடிகை மீது போலீசார்
 சில வரி செய்திகள்...: இந்தியா

காந்தி, நேரு குறித்து அவதுாறு
புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், 'பாலிவுட்' நடிகை பாயல் ரோஹத்கி மீது போலீசில் ஒரு புகார் அளித்தனர். அதில், மஹாத்மா காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் குறித்து, பாயல் ரோஹத்கி அவதுாறு 'வீடியோ' தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இம்மாதம் அதிக மழை

புதுடில்லி: டில்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கை:நாட்டில், கடந்த மாதம் இயல்பைவிட, 24 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. இதற்கு மாறாக, இம்மாதம் வழக்கமான அளவைவிட அதிக மழை பெய்யும். இம்மாத சராசரி மழைப்பொழிவு, 110 சதவீதம் என்பதை கடந்து மழை பெய்யும். எனவே, நடப்பாண்டு மழை பற்றாக்குறையின் அளவு குறையும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

நிலக்கரி லாரிகளுக்கு 'காஸ்'

புதுடில்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.ஐ.எல்., எனப்படும் நிலக்கரி சுரங்க தொழில் நிறுவனம், ஆண்டுதோறும் நிலக்கரி போக்குவரத்திற்கு டீசல் கொள்முதல் செய்ய, 3,500 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதனை குறைக்க நிலக்கரி போக்குவரத்துக்கான லாரிகளை, 'காஸ்' வாயிலாக இயக்க முடிவு செய்து கட்டமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது. இந்நடவடிக்கையால், ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

திரைப்பட இயக்குனருக்கு கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் பிரபல ஹிந்தி திரைப்படம் மற்றும் நடன இயக்குனர் பாரா கான் குந்தர், 56, கொரோனாவால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதியானது. இவர், இரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். இது குறித்து அவர் கூறும்போது, ''நான் மட்டுமின்றி, என்னுடன் திரைப்பட பணிகளில் இருந்த அனைவரும் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இருப்பினும் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது,'' என்றார்.

சாய்ரா பானு குணமடைந்தார்

மும்பை: ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார், ஜூலை மாதம் மரணம் அடைந்தார். அவரது மனைவியும், பிரபல நடிகையுமான சாய்ரா பானு, 77, மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் நேற்று கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X