தவறான வார்த்தை பிரயோகம் மன்னிப்பு கேட்டார் ஹரிஷ் ராவத்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சண்டிகர்:சீக்கியர்கள் புனிதமாக கருதும், 'பஞ்ச் பியாரே' வார்த்தையை பயன்படுத்தியதற்கு, காங்., மூத்த தலைவர், ஹரிஷ் ராவத் மன்னிப்பு கேட்டு உள்ளார். பரிகாரம் தேடும் வகையில், குருத்வாராவில் தூய்மை பணியில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். பஞ்சாபில் காங்.,கைச் சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு
 தவறான வார்த்தை பிரயோகம் மன்னிப்பு கேட்டார் ஹரிஷ் ராவத்

சண்டிகர்:சீக்கியர்கள் புனிதமாக கருதும், 'பஞ்ச் பியாரே' வார்த்தையை பயன்படுத்தியதற்கு, காங்., மூத்த தலைவர், ஹரிஷ் ராவத் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

பரிகாரம் தேடும் வகையில், குருத்வாராவில் தூய்மை பணியில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். பஞ்சாபில் காங்.,கைச் சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரையும் சமாதானபடுத்தும் முயற்சியில், கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளரான ஹரிஷ் ராவத் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக, சித்து மற்றும் மூத்த நிர்வாகிகள் நான்கு பேரை அவர் சந்தித்து பேசினார். அப்போது, அவர்களை, 'பஞ்ச் பியாரே' என, குறிப்பிட்டார்.இதற்கு அகாலி தளத் தலைவர் தில்ஜித் சிங் சீமா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 'சீக்கியர்களின் வழக்கத்தில், இந்த வார்த்தை, மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. 'அதை கிண்டலாக பயன்படுத்தியதற்காக ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சீக்கியர்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதாக, ஹரிஷ் ராவத் கூறியுள்ளார். மேலும், பரிகாரம் தேடும் வகையில், குருத்வாராவில் தூய்மைப் பணியில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.


'இணைந்து பணியாற்றுங்கள்'

அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், சண்டிகரில், சித்து உள்ளிட்ட நிர்வாகிகளை, ஹரிஷ் ராவத் சந்தித்து பேசினார்.'அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தரை நீக்குவதற்கு வாய்ப்பு இல்லை. இதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்' என, ராவத் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X