பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்கிராம பெண்களுக்கு மருத்துவ சேவை பயிற்சி

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு, சுகாதாரம், மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக, மலைக்கிராம, அதை சார்ந்த குக்கிராம பெண்களுக்கு பயிற்சி அளிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் டிச., 31ல், 18 வயது பூர்த்தியாக வேண்டும். 35க்கு மிகைப்பட கூடாது. அங்கன்வாடி பணியாளர் எனில், 42 வயதுக்குள்

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு, சுகாதாரம், மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக, மலைக்கிராம, அதை சார்ந்த குக்கிராம பெண்களுக்கு பயிற்சி அளிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் டிச., 31ல், 18 வயது பூர்த்தியாக வேண்டும். 35க்கு மிகைப்பட கூடாது. அங்கன்வாடி பணியாளர் எனில், 42 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி அவசியம். குழந்தை வளர்ச்சி திட்ட முதன்மை அங்கன்வாடி பணியாளர் எனில், குறைந்தது, இரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். இருப்பிட சான்று நகல் வழங்கி, சேலம், சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை கட்டணமின்றி பெறலாம். மதிப்பெண், ஜாதி சான்று உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து. அதன் மீது, '2 ஆண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி' என குறிப்பிட வேண்டும். செப்., 15க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். பயிற்சி முடித்த பின், மலைப்பகுதியில், 5 ஆண்டு கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X