அரசியல் செய்தி

தமிழ்நாடு

'புதிய சட்டக் கல்லுாரி இந்த ஆண்டு கிடையாது'

Added : செப் 01, 2021
Share
Advertisement
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - அன்பழகன்: கும்பகோணம் தொகுதியில், சட்டக் கல்லுாரி துவக்க, அரசு ஆவன செய்யுமா?அமைச்சர் ரகுபதி: இல்லைஅன்பழகன்: தஞ்சாவூரில் பழமையான நீதிமன்றம் உள்ளது. கும்பகோணத்தில், அரசு சார்பில், இரண்டு கலைக் கல்லுாரிகள் மட்டும் உள்ளன. தனியார் பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரி, விவசாயக் கல்லுாரி போன்றவை உள்ளன. தற்போது, தஞ்சாவூர் மற்றும்

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - அன்பழகன்:

கும்பகோணம் தொகுதியில், சட்டக் கல்லுாரி துவக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் ரகுபதி:

இல்லை

அன்பழகன்:

தஞ்சாவூரில் பழமையான நீதிமன்றம் உள்ளது. கும்பகோணத்தில், அரசு சார்பில், இரண்டு கலைக் கல்லுாரிகள் மட்டும் உள்ளன. தனியார் பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரி, விவசாயக் கல்லுாரி போன்றவை உள்ளன. தற்போது, தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மாணவர்கள் சட்டம் படிக்க, திருச்சி செல்ல வேண்டி உள்ளது. எனவே, கும்பகோணத்தில் புதிதாக சட்டக் கல்லுாரி அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் ரகுபதி:

தமிழகத்தில் தற்போது, 14 அரசு சட்டக் கல்லுாரிகள், ஒரு சீர்மிகு சட்டப் பள்ளி, தேசிய சட்டப் பல்கலை போன்றவை செயல்படுகின்றன. இதில், 17 ஆயிரத்து 433 மாணவர்கள் படிக்கின்றனர். மாவட்டம்தோறும் அரசு சட்டக் கல்லுாரி துவங்க வேண்டும் என்பது தான் முதல்வரின் விருப்பம். ஆனால், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட அசாதாரண நிதி நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டில் எந்த புதிய சட்டக் கல்லுாரியும் துவங்க இயலாத நிலை உள்ளது. எனவே, அதற்கான வாய்ப்பு இல்லை.

அன்பழகன்:

கும்பகோணத் தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், தொழிலாளர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் போன்றவை உள்ளன. கும்பகோணத்தில், மகளிர் நீதிமன்றம் அமைத்து தர வேண்டும்.

ரகுபதி:

நீதிமன்றம் அமைக்க, உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். உயர் நீதிமன்றத்தில் இருந்து வரும் கோரிக்கைக்கு, அரசு நிதி ஒதுக்கி, நீதிமன்றத்தை துவக்கும். எனவே, கும்பகோணம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றம் வழியே, உயர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை கள் அனுப்பவும். உயர் நீதிமன்றம், அதை பரிசீலிக்கும்படி தெரிவித்தால், அரசு நடவடிக்கை எடுக்கும்.

வி.சி., - முகமது ஷாநவாஸ்:

நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலை அமைக்கப்படாததால், திறக்கப்படாமல் உள்ளது. சமூக விரோதிகள், புதிய கட்டடத்துக்கு சேதம் ஏற்படுத்துகின்றனர். எனவே, மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து, கட்டடத்தை திறக்க வேண்டும்.

ரகுபதி:

உட்கட்டமைப்பு பணிகளுக்காக, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் நீதிமன்றம் திறக்கப்படும்.

இந்திய கம்யூ., - மாரிமுத்து:

திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், புதிதாக கட்டப்பட்டு செயல்படுகிறது. அதோடு சார்பு நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. சார்பு நீதிமன்றம் துவங்க, அனுமதி வழங்கப்படுமா?ரகுபதி: உயர் நீதிமன்ற அனுமதி பெற்று திறக்கப்படும்.

தி.மு.க., - உதயசூரியன்:

சங்கராபுரத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் கட்டி முடிக்கப் பட்டு, ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன; அதற்கு பாதை இல்லை. பாதைக்குரிய இடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சொந்தமானது. வேளாண் துறை அமைச்சருடன் பேசி, அந்த நிலத்தை பெற்று, சாலை அமைத்து, நீதிமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும். புதிதாக சார்பு நீதிமனறம் அமைத்து தர வேண்டும்.

ரகுபதி:

யாருடைய கோரிக்கையாக இருந்தாலும், அதை நிறைவேற்றி தர வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. வேளாண் துறை அமைச்சர் பரிவுள்ளம் கொண்டவர். அவர் இடத்தை வழங்குவார். அதற்குரிய நடவடிக்கையை, நாங்கள் மேற்கொள்வோம். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X