பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய குழு தலைவர் மீது உறுப்பினர்கள் பகீர்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சேலம்: மேச்சேரி ஒன்றிய குழுவை சேர்ந்த பகத்சிங் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள், நேற்று, கலெக்டரிடம் அளித்த மனு: நாங்கள் உள்பட, 15 பேர் பதவிக்கு வந்து, 20 மாதங்களாகியும், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் காலம் கடத்துகிறார். பொது நிதியில், மாதந்தோறும் செலவின கணக்கு காட்டப்படுகிறதே தவிர, குடிநீர், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட

சேலம்: மேச்சேரி ஒன்றிய குழுவை சேர்ந்த பகத்சிங் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள், நேற்று, கலெக்டரிடம் அளித்த மனு: நாங்கள் உள்பட, 15 பேர் பதவிக்கு வந்து, 20 மாதங்களாகியும், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் காலம் கடத்துகிறார். பொது நிதியில், மாதந்தோறும் செலவின கணக்கு காட்டப்படுகிறதே தவிர, குடிநீர், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. முறைகேடு நடந்திருப்பது அறிந்து, கடந்தாண்டு ஜூலை, 10, செப்., 7, டிச., 3, கடந்த, 24ல் நடந்த கூட்ட தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தோம். அதன்பிறகும் ஒன்றிய கமிஷனர் கூட, செலவின கணக்கு காட்டவில்லை. ஊதியம் பெயரில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், எத்தனை ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்ற விபரம் இல்லை. பிளீச்சிங் பவுடர் வாங்கியதில், 3 - 4 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், 8 மாதமாக கூட்டம் நடத்தவில்லை. இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து, தனலட்சுமி கூறுகையில், 'உறுப்பினர்கள் புகார் சொல்வது வாடிக்கை. முறைகேடு எதுவும் நடக்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X